தில்லு முல்லு 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி இயக்குனர் விசு ஹைகோர்ட்டில் வழக்கு

Subscribe to Oneindia Tamil

Ban Thillu Mullu 2: Visu approaches Chennai HC
சென்னை: சிவா நடித்துள்ள தில்லு முல்லு 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி இயக்குனர் விசு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படம் தில்லு முல்லு. அந்த படத்தை தற்போது தில்லு முல்லு 2 என்ற பெயரில் எடுத்துள்ளனர். இந்த படத்தில் ரஜினி கதாபாத்திரத்தில் சிவா நடித்துள்ளார். கமல் கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்துள்ளார்.

படம் நாளை மறுநாள் அதாவது 14ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் படத்தை தடை செய்யக் கோரி இயக்குனர் விசு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

'தில்லுமுல்லு' படம் ரஜினி நடித்து வெளிவந்தது. அப்படத்துக்கு நான்தான் திரைக்கதை, வசனம் எழுதினேன். தற்போது அப்படத்தை 'தில்லு முல்லு 2' என்ற பெயரில் படமாக எடுத்துள்ளனர். வேந்தர் மூவீஸ் தயாரித்து உள்ளது. இந்த படத்தை எடுப்பதற்கு என்னிடம் அனுமதி கேட்கவில்லை. எனவே 'தில்லுமுல்லு2' படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+