சென்னை ரொம்ப சூடா இருக்காம்.. ஜில்லுன்னும் இருக்காம்!
சென்னை: கடந்த கால தட்பவெப்ப பதிவுகளை வைத்துக் கணக்கிடுகையில் சென்னை நகரில் வெப்ப நிலை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அதேபோல, குளிர்ச்சியும் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மைய புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எங்கு பார்த்தாலும் கான்க்ரீட் காடுகளாகி வருகின்றன. கிராமங்கள், வயல்கள் அழிந்து நகரங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளன.
இப்படி நகர்ப்புறமயமாக்கல் படு வேகமாக இருந்து கொண்டிருப்பதால், தட்பவெப்பமும் மாறத் தொடங்கியுள்ளது. சென்னை நகரில் கடந்த சில ஆண்டுகளில் வெப்ப நிலை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதேசமயத்தில், சென்னை நகரில் குளிர்நிலையும் கூட அதிகரித்துள்ளதாக இதே புள்ளி விவரம் கூறுகிறது.

42 ஆண்டுகளில்
கடந்த 42 ஆண்டுகளில் சென்னையில் வெப்பமும், குளிரும் ஒரு சேர அதிகரித்துள்ளதாம்.

வெயிலின் சராசரி 40
கோடை காலத்தில் சென்னையில் சராசரியாக 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் வெளுக்கிறது.

குளிர் 19 டிகிரி
அதேசமயத்தில், குளிர்காலத்தில்ச ராசரியாக 19 டிகரி செல்சியஸ் அளவுக்கு குளிர் நிலவுகிறது.

சூடான நாட்கள்
கடந்த 21 ஆண்டுகளில் சென்னையில் வெப்பம் அதிகமான நாட்கள்தான் அதிகம் பதிவாகியுள்ளது. அதாவது 220 நாட்கள்.

ஜில்லுன்னு 58
அதேசமயம், குளிர்ச்சியான நாட்களின் எண்ணிக்கை குறைவுதான். அதாவது 58 நாட்கள்.

சூடு 27 சதவீதம் ஜாஸ்தி
சூடான நாட்களின் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளதாம். குளிர்ச்சியான நாட்கள் 69 சதவீதம் குறைந்துள்ளதாம்.

மழை அதிகம்தான்
கடந்த 20 ஆண்டுகளில் வருடாந்திர மழைப் பொழிவின் அளவு 11.2 செமீ அளவுக்கு அதிகரித்துள்ளது.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
காசிமேடு கடலில் சட்டென பார்த்தால்.. தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்த உருவம்.. ஸ்டன் ஆன சென்னை -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா?












Click it and Unblock the Notifications