தாய்மையின் சின்னமாக கிம் கர்தஷியானின் ‘நிர்வாண கர்ப்பச்சிலை’: உரசினால் அதிர்ஷ்டமாம்

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சலெஸ்: லாஸ் ஏஞ்சலெஸ் கர்ப்பிணியாக இருக்கும் கிம் கர்தஷியானை அழகான சிலையாக வடித்திருக்கிறார்லாஸ் ஏஞ்சலெஸைச் சேர்ந்த டேணியல் எட்வர்ட்ஸ்.

இந்த சிலை கர்ப்பிணியாக உள்ள கிம்மின் முழு உருவ நிர்வாண சிலையாகும். அதாவது கர்ப்பமான நிலையிலேயே இந்த சிலையை வடித்துள்ளார் எட்வர்ட்ஸ்.

இந்தசிலை லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள ஆர்ட் காலரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு எட்வர்ட்ஸ் நடத்தும் கலைக் கண்காட்சி இடம் பெற்றுள்ளது. அதில்தான் கிம்மின் இந்த கற்சிலை இடம் பெற்றுள்ளது.

குட்டிப்பாப்பா இப்படித்தானிருக்கும்...

குட்டிப்பாப்பா இப்படித்தானிருக்கும்...

கர்ப்பிணி கிம்மின் சிலை மட்டுமல்லாமல், கிம்மின் வயிற்றுக்குள் இருக்கும் சிசுவின் சிலையையும் கூட கற்பனையாக வடிவமைத்து வைத்துள்ளார் எட்வர்ட்ஸ்.

அதிர்ஷ்டம் அழைக்கிறது....

அதிர்ஷ்டம் அழைக்கிறது....

கர்ப்பிணி கிம்மின் சிலையை தொட்டுப் பார்த்தும், உரசியும் சென்றால் நல்லதிர்ஷ்டம், வெற்றி கிடைக்கும் என்றும் எட்வர்ட்ஸ் கிளப்பி விட்டுள்ளதால் பார்வையாளர் கூட்டம் அலை மோதுகிறதாம்.

கவர்ச்சியானவர் கிம்...

கவர்ச்சியானவர் கிம்...

இதுகுறித்து எட்வர்ட்ஸ் கூறுகையில்,கிம் கர்தஷியான் மிகவும் அழகானவர். கவர்ச்சி நிரம்பியவர். அவரது கவர்ச்சியை மீடியாக்கள் வேறு விதமாக காட்டி வருகின்றன. ஆனால் தாய்மை நிரம்பிய அவரது கவர்ச்சியை நான் சிலையாக்கியுள்ளேன். மக்கள் மனதில் படிந்து கிடக்கும் எண்ணத்தை மாற்றுவதே எனது நோக்கம் என்றார்.

வியர்வை ரசிகர்கள்...

வியர்வை ரசிகர்கள்...

மேலும் அவர் கூறுகையில், கிம் கர்தஷியாவின் கவர்ச்சி விஷயங்களைத்தான் மக்கள் அதிகம் பார்க்கின்றனர். அவரது அக்குளில் காணப்படும் வியர்வையைக் கூட ரசிக்கிறார்கள். அவர் எப்படி் டிரஸ் செய்கிறார் என்றும் பார்க்கிறார்கள். இதையெல்லாம் கூட நான் எனது சிலையில் காட்டியுள்ளேன்.

தாயமியின் சின்னம்....

தாயமியின் சின்னம்....

புத்தரை அமைதியின் சின்னமாக அனைவரும் பார்க்கிறார்கள். புத்தர் சிலையை உரசிப் பார்த்தும், தொட்டுச் செல்வதும் சம்பிரதாயமாக உள்ளது. அதேபோல கிம் கர்தஷியானை தாய்மையின் சின்னமாக நான் சித்தரித்துள்ளேன். எனவே கிம் சிலையையும் உரசிப் பார்த்தும் தொட்டுச் செல்லுமாறும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் எட்வர்ட்ஸ்.

கேட் மிடில்டன் பாப்பா...

கேட் மிடில்டன் பாப்பா...

இந்த கண்காட்சியில் கி்ம்மின்வயிற்றில் உள்ள சிசுவையும் கற்பனையாக வடித்துள்ளார் எட்வர்ட்ஸ். இவர் மட்டுமல்லாமல், கேட் மிடில்டனின் சிசுவையும் கூட கற்பனையாக வடித்து வைத்துள்ளார்.

பிரிட்னியின் கர்ப்பச் சிலை...

பிரிட்னியின் கர்ப்பச் சிலை...

பிரபலங்களின் சிலைகளை வித்தியாசமாக வடித்து பிரபலமானவர் இந்த எட்வர்ட்ஸ். முன்பு 2006ம் ஆண்டு பிரிட்னி ஸ்பியர்ஸ் கர்ப்பமாக இருந்தபோதும் இப்படித்தான் ஒரு சிலையை வடித்தார்.

சிலைகள் பலவிதம்...

சிலைகள் பலவிதம்...

ஜஸ்டின் பீபர் மற்றும் செலீனா கோமஸின் சிலைகளையும் கூட இவர் வடிவமைத்துள்ளார். 2009ம் ஆண்டு பிராட் பிட், ஏஞ்செலீனா ஜூலி ஆகியோரின் சிலைகளையும் வடிவமைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+