ஆஸி. பிரதமரின் மார்புகளை கேலி செய்து உணவுக்குப் பெயர்... மன்னிப்பு கேட்டார் மாஜி அமைச்சர்

முன்னாள் அமைச்சர் மால் பாரோ, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான லிபரல் தேசிய கட்சி சார்பில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்துக்கான நிதி சேகரிப்புக் கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.
இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் இடம் பெற்றிருந்த உணவு வகைகள் குறித்த பெயர் பட்டியலில் இடம் பெற்றிருந்த பெயர் அனைவரையும் முகம் சுளிக்க வைப்பதாக இருந்தது. காரணம், ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்டை செக்ஸ் வக்கிரத்துடன் கிண்டலடித்து அந்தப் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
அதாவது மெனு லிஸ்ட்டில் இடம் பெற்றிருந்த ஒரு உணவுக்கு, Julia Gillard Kentucky Fried Quail: Small Breasts and Huge Thighs and A Big Red Box என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்தப் பெயர் சூட்டலுக்காக உடனடியாக மன்னிப்பு கேட்டார் மால் பாரோ. மேலும் இந்தப் பெயரை தங்களது கட்சிக்காரர்கள் யாரும் சூட்டவில்லை என்றும் ஆர்வக் கோளாறில் யாரோ சூட்டி விட்டதாகவும் கூறினார்.
மேலும் இந்த மெனு பட்டியல் தனது பார்வைக்கு வரவில்லை என்றும் கூறிய அவர், இந்தத் தவறுக்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.
உணவு வகைக்கு ஆபாசமான முறையில் பிரதமரின் பெயர் சூட்டப்பட்டது குறித்த செய்தி டிவிட்டர் மூலம் படு வேகமாக பரவியதால் பரபரப்பாகி விட்டது குறிப்பிடத்தகக்து.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications