கோபத்தில் ’ஹை ஹீல்’ஸால் தாத்தாவை அடித்துக் கொன்ற காதலி: அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

ஹூஸ்டன்: அமெரிக்க பேராசிரியரை அவரது காதலி ஆத்திரத்தில் தனது ஹை ஹீல்ஸால் தலையில் அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹை ஹீல்ஸ் அணிபவருக்கு முதுகு வலி பாதிப்பு வரும் என்ற எச்சரிக்கையைத் தாண்டி, தற்போது அது பெண்களுக்கு ஆயுதமாக மாறி வரும் அபாயமும் உள்ளது இச்சம்பவம் மூலம் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பணியாற்றிய பேராசிரியர் ஸ்டீபன் ஆன்டர்சன் (59). இவருடைய காதலி பெயர் ஆனா துருஜில்லோ(44). சம்பவத்தன்று காதலர்களிருவரும் ஜாலியாக வெளியே சென்று நன்றாக குடித்து விட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளனர்.

வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே காதலர்கள் இருவருக்கும் இடையே தகராறு உண்டானது. வாய்த்தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதற்கிடையில், அவசர போலீசுக்கு போன் செய்த ஆனா, ஸ்டீபன் தன்னை துன்புறுத்துவதாக புகார் செய்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் விசாரிப்பதற்காக, ஸ்டீபன் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு, தரையில் ஸ்டீபன் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்தனர். அவருடைய தலைப்பகுதியில் ‘ஷூ'வின் குதிங்கால் பகுதியை கொண்டு தாக்கிய அடையாளம் காணப்பட்டது.

கோபத்தில் காலில் கிடந்த ஹை ஹீல்ஸ்ஸைக் கழட்டி, ஆனா அடித்திருக்கலாம், அதனால் ஸ்டீபன் இறந்திருக்கலாம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணையை போலீசார் துரிதப் படுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+