நிர்வாணமாக்கி... பிரம்பால் அடித்து... வேலைக்காரப் பெண்ணைக் கொன்ற போலீஸ் மனைவி: துபாயில் பயங்கரம்
துபாய்: துபாயில் போலீஸ் அதிகாரியின் மனைவி ஒருவர் வேலைக்கார பெண்களை அறையில் அடைத்து சித்ரவதை செய்து, பட்டினி போட்டதில் பரிதாபமாக ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 29 வயது பெண் கடந்தாண்டு அக்டோபர் மாதம், வீட்டு வேலைக்காக துபாயில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரியின் வீட்டில் விடப்பட்டார். தான் போலீஸ் அதிகாரியின் மனைவி என்ற ஆணவத்தில் அவ்வீட்டின் முதலாள்யம்மா வேலைக்காரப் பெண்களை கொடுமைப்படுத்தியுள்ளார்.
பிலிப்பைஸ் பெண்ணுடன் மற்றொரு பெண்ணும் அந்த வீட்டில் வேலைக்கு இருந்துள்ளார். இருவரையும் முதலாளியம்மா செய்த கொடுமைகள் ஏராளமாம்..

ஆல் இன் ஆல் வேலைகள்...
வீட்டு வேலைகளோடு, முதலாளியம்மாவின் எடுபிடி வேலைகளை சேர்த்து செய்ய வேண்டுமாம். மேலும் 3லிருந்து 11 வயதிற்குட்பட்ட அவர்களின் 4 குழந்தைகளையும் கவனித்து கொள்ள வேண்டும் என்பது வேலைக்கார பெண்களின் பொறுப்பு.

பட்டினிக் கொடுமை...
காலை மற்றும் மதிய உணவு ஒரு கோப்பை தேநீரும், ஒரு துண்டு ரொட்டியும் தான். இஅதை சாப்பிட்டு விட்டு நாள்முழுதும் கடுமையாக உழைக்க வேண்டுமாம் வேலைக்காரப் பெண்கள். இதைவிட கொடுமை இரவில் உணவு தராமல் பட்டினி போட்டு விடுவாராம் வேலைக்காரப் பெண்களை.

பிரம்படி தண்டனை...
சி.சி.டி.வி. வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் கண்காணித்து, சிறு தவறுகளுக்குக்கூட ரத்தம் வடியும் அளவிற்கு பிரம்படி கொடுத்துள்ளார் முதலாளியம்மா. சில வேளைகளில் அவரது தலையை சுவற்றில் மோதி காயப்படுத்தி சித்ரவதை செய்தும் அந்த ஈவிரக்கமில்லாத எஜமானி ஆனந்தமடைந்துள்ளார்.

ரூமில் அடைத்து வைத்து சித்ரவதை...
இரண்டு வேலைக்காரப் பெண்களையும் ஒரே அறையில் அடைத்து வைத்து நான்கைந்து நாட்களுக்கு உணவு தராமல் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். சில சமயங்களில் ஒருவருக்கு மட்டும் உணவு கொடுத்து, அவர் சாப்பிடுவதை பார்க்க வைத்து சித்ரவதை செய்துள்ளார்.

அருவருப்பான தண்டனைகள்...
அருவருக்கத்தக்க வகையில் வசை பாடியும், துடைப்பம், செருப்பு போன்றவற்றால் அடித்தும், அசிங்கமான தனது உள்ளாடையை முகர்ந்துப் பார்க்கும் படியும் வற்புறுத்தியும் சித்ரவதை செய்த அந்த போலீஸ் மனைவி, வேலைக்கார பெண்கள் இருவரையும் பலமுறை நிர்வாணப்படுத்தி தனது செல்போனில் படம் பிடித்து வைத்து மரட்டி வந்துள்ளார்.

பலியான இளம் பெண்...
இறுதியில் போதிய ஊட்டச்சத்து கிடைக்காததால் குற்றுயிராக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பிலிப்பைன்ஸ் வேலைக்காரப் பெண் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அவர் மரணத்தின் மூலம், கொடுமைக்கார எஜமானியின் கோரமுகம் வெளியில் தெரிய வந்தது.

வழக்கு நடக்கிறது...
பெண்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்தது, ஒரு பெண்ணின் மரணத்துக்கு காரணமாக இருந்தது போன்ற குற்றச்சாட்டின் கீழ் தற்போது போலீஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி மீது மீது துபாய் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. மறு விசாரணை ஜூலை 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இருவரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications