பெங்களூர் பெட்ரோல் பங்குகளில் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்க!

பெங்களூரில் உள்ள பல பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர். பெட்ரோல் பங்கில் எப்படி நீங்கள் உங்களுக்கு தெரியாமலேயே ஏமாறுகிறீர்கள் என்பதை பார்ப்போம்.
அவிஷேக் ஷர்மா என்பவர் பெங்களூர் ஜே.பி. நகர் பகுதியில் உள்ள பங்க் ஒன்றுக்கு சென்று தனது காருக்கு ரூ.1,000க்கு பெட்ரோல் போடுமாறு கூறியுள்ளார். மீட்டர் ரூ.700ஐ தொட்டபோது பங்க் ஊழியர் ஒருவர் அவரிடம் வந்து கிரெடிட் கார்ட் பில்லில் கையெழுத்து கேட்டுள்ளார். அவர் கையெழுத்து போட்டுவிட்டு திரும்புவதற்குள் மீட்டர் ரூ.1,000த்தை தொட்டுவிட்டது.
இதனால் சந்தேகம் அடைந்த சர்மா மீட்டர் பில்லை சண்டை போட்டு வாங்கிப் பார்த்தால் அதில் ரூ.731க்கு மட்டுமே பெட்ரோல் போடப்பட்டது இருந்தது தெரிய வந்தது.
இதே போன்று விவேக் சிங்கால் என்பவர் குடும்பத்துடன் சினிமாவுக்கு காரில் கிளம்பினார். வழியில் திலக் நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் ரூ.1000க்கு பெட்ரோல் போட்டுள்ளார். மீட்டர் ரூ. 760 வந்ததும் பங்க் ஊழியர் ஒருவர் அவரது கவனத்தை திசை திருப்ப பெட்ரோல் பற்றிய சலுகைகள் குறித்து பேசியுள்ளார். அந்த சந்து கேப்பில் மீட்டர் ரூ.1,000த்தை தொட்டது. அவர் மட்டுமல்ல தீபக் சிங் என்பவர் தனது பைக்கிற்கு பெட்ரோல் போட்டு பலமுறை இப்படி ஏமாந்துள்ளார்.
தான் ஏமாற்றப்படுவது தெரியாமல் தனது பைக் தான் மைலேஜ் தருவதில்லை என்று இத்தனை நாட்களாக நினைத்துள்ளார். பெங்களூர்வாசிகளே, பெட்ரோல் பங்க் சென்றால் உஷாராக இருங்கள். அவிஷேக் சர்மா பிரச்சனை செய்து பில்லை வாங்கிப் பார்த்து உண்மையைக் கண்டுபிடித்துவிட்டார். அதனால் பங்க் மேனேஜர் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் தாங்கள் ஏமாற்றப்படுவது தெரியாமலேயே எத்தனையோ பேர் உள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications