தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறுகிறது ஐக்கிய ஜனதா தளம்!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேற இருந்து ஐக்கிய ஜனதா தளம் முடிவெடுத்துவிட்டது.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பல ஆண்டுகளாக ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகித்து வருகிறது. பீகார் மாநிலத்திலும் நிதிஷ்குமார் தலைமையில் பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாஜக முன்னிறுத்துவதை ஐக்கிய ஜனதா தளம் விரும்பவில்லை. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டண்யில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலக முடிவு செய்துவிட்டது. இது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் அக்கட்சித் தலைவர் சரத் யாதவ் ஏற்கெனவே ஆலோசனை நடத்தி உள்ளார்.

பாஜக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பதா? இல்லையா? என்பதை வரும் 15ந் தேதிக்குப் பிறகு ஐக்கிய ஜனதா தளம் அறிவிக்க இருக்கிறது. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறினாலும் பீகாரில் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை அக்கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில், ஐக்கிய ஜனதா தளத்தின் பலம் 118. அந்த கட்சி தனிப்பெரும்பான்மை பலம் பெறுவதற்கு 4 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவையாகும். இதற்காக 6 சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications