பறக்கும் ‘இட்லி’ தட்டுகள்...: லண்டனில் உலா வரும் ‘டிரோன்’ சப்ளையர்கள்
லண்டன்: பொதுவாக ஓட்டலுக்குப் போனால் சப்ளையர் வந்து மெனு கார்டைத் தந்து என்னவேண்டும் எனக் கேட்பார். பின் நாம் ஆர்டர் செய்தவற்றை கொண்டு வந்து மேஜையில் பரிமாறுவார். இது தானே வழக்கமாக நாம் ஹோட்டல்களில் பார்க்கும் காட்சி.
ஆனால், மாயாஜாலக் காட்சிகளில் வருவதுபோல், ஆர்டர் செய்த உணவு பறக்கும் தட்டாக ஆகாசத்தில் வந்து குதித்தால் எப்படி இருக்கும். உண்மையிலேயே இந்த அனுபவத்தை ருசித்து வருகிறார்கள் லண்டன்வாசிகள்.
இங்கிலாந்தில் உள்ள யோ சுஷி ஓட்டலில் தான், இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிரோன் வசதி...
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஓட்டல் நிறுவனம் ‘யோ சுஷி'. தலைநகர் லண்டன் மட்டுமின்றி நாட்டின் பல இடங்களிலும் ரஷ்யா, ஐக்கிய அரபு குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் இதன் கிளைகள் உள்ளன. இதன் லண்டன் கிளையில் சமீபத்தில் ‘டிரோன் சர்வீஸ்' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பறக்கும் தட்டு சப்ளையர்கள்...
வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவை மினி டிரோன் ஒன்றுசுமந்துகொண்டு டேபிளுக்கே பறந்து வருகிறது. ஐபேட் கண்ட்ரோலில் இயக்கப்படும் இந்த டிரோன் சப்ளை வாடிக்கையாளர்களை மூக்கில் விரல் வைத்து ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

இதுவும் மினி ஹெலிகாப்டர் தான்...
இந்த மினி டிரோனில், மினி ஹெலிகாப்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால், அது அழகாக இறக்கைகளை சுழற்றியபடி ஜிவ்வென்று பறந்து செல்கிறது.உணவுப் பதார்த்தங்களை வாடிக்கையாளர் எடுத்துக் கொண்ட பிறகு திரும்பி பறந்து சென்று விடும் வகையில் இது ட்ய்ய்ன் செய்யப்பட்டுள்ளது.

பறந்து பறந்து உழைக்கும்...
2 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த டிரோனை, ஓட்டல் ஊழியர் ஒருவர் ஐபாட் உதவி கொண்டு இயக்குகிறார். இந்த டிரோன் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறனுடையது.

விரைவில் மற்ற கிளைகளில் அறிமுகம்...
இந்த டிரோன் ஐடியா குறித்து யோ சுஷி ஓட்டல் அதிகாரிகள் கூறுகையில், ‘உலகம் முழுவதும் எங்கள் ஓட்டல்கள் 70 இடங்களில் உள்ளது. கன்வேயர் பெல்ட் மூலம் சப்ளை செய்வது, ரோபோ மூலம் சப்ளை செய்வது ஆகிய முயற்சிகளை தொடர்ந்து, தற்போது மினி டிரோன் உதவியுடன் சப்ளையை தொடங்கியிருக்கிறோம். அசம்பாவிதங்கள் எதுவுமின்றி, இது சிறப்பாக நடந்தால் மற்ற கிளைகளிலும் அறிமுகப்படுத்தப்படும்' என தெரிவித்தனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications