மர்லின் மன்றோ – கென்னடி இடையேயான தொடர்பு: சிஐஏ ஏஜென்ட் ஆதாரம்!
வாஷிங்டன்: மறைந்த கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோவுக்கும் மறைந்த அமெரிக்கஅதிபர் ஜான் எப் கென்னடிக்கும் இடையே உடல் ரீதியான தொடர்புகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகி அமெரிக்காவை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
மர்லின் மன்றோவுக்கு இன்றளவும் உலகம் முழுவதும் நிறைய ரசிகர்கள். அவரது அழகும், கவர்ச்சியும் அப்படி. அந்தக் காலத்தில் மட்டுமல்லாமல்இப்போதும் கூட நிறையப் பேர் ரசிகர்களாக உள்ளனர்.
அதேபோல அமெரிக்காவின் பிரபலமான ஜனாதிபதியாக இருந்தவர் ஜான் எப் கென்னடி. இப்போது இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து வந்துள்ள செய்திகள்தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜான் கென்னடியும், மர்லினும் உடல் ரீதியாக நெருக்கமாக பழகியதாக குண்டைப் போட்டுள்ளார் முன்னாள் சிஐஏ ஏஜென்ட் ஒருவர்.

கவர்ச்சி மாயக்காரி மர்லின்
தனது கவர்ச்சிகரமான அழகால் பலரையும் வசீகரித்தவர் மர்லின் மன்றோ. இவருக்கென்று பெரும் ரசிகர் கூட்டம்.

வாள் விழியால் வலை வீசியவர்
தனது வாள் விழியால் பல இளம் நெஞ்சங்களை வீழ்த்தியவர் மர்லின். ஹாலிவுட்டின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர்.

பிரபலங்கள் இவருக்குப் பின்னால்
தனது காலத்தில் பல்வேறு பிரபலங்களையும் கவர்ந்திழுத்தவர் மர்லின். நான் மர்லினின் தோழர் என்று கூறிக் கொள்ள பலரும் அப்படி போட்டி போட்டனர்.

நிறைய திருமணம்
மர்லின் மன்றோ பலரைத் திருமணம் செய்தவர். ஆனால் எந்த வாழ்க்கையும் அவருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை.

போதையில் மரணம்
மர்லினின் மரணமும் கூட மர்மமானது.அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிலரும், போதை மாத்திரையை அதிகம் பயன்படுத்தியதால் இறந்தார் என்றும் இன்று வரை சர்ச்சை நீண்டு கொண்டிருக்கிறது.

ஜான் கென்னடியுடன்
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஜான் எப் கென்னடிக்கும், மர்லினுக்கும் நெருக்கமான உறவு இருந்ததாக செய்திகள் வெளியாகின.

நெருக்கத்தைப் பார்த்த உளவாளி
முன்னாள் சிஐஏ ஏஜென்ட் ஒருவர், ஜான் எப் கென்னடியை ரகசியமாக உளவு பார்க்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர்தான் மர்லினுக்கும், கென்னடிக்கும் இருந்த ரகசிய உறவைக் கண்டுபிடித்தார். இருவரும் நெருக்கமாக இருந்ததையும் கூட பார்த்தவர் அவர்.

பரபரப்பில் மக்கள்
ஜான் எப் கென்னடி சற்றே கிளீன் என்ற இமேஜை வைத்திருந்தவர். ஆனால் அவர் மர்லினுடன் நெருக்கமாக இருந்தார் என்ற செய்தி அமெரிக்க மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் இதெல்லாம் சாதாரணமப்பா
ஆனால் அதிபர்களுக்கும், பிரபல பெண்களுக்கும் இடையே நெருக்கம் ஏற்படுவது சாதாரண விஷயமாகி விட்டது. இதே ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பில் கிளிண்டன் செய்த வேலை உலகம் அறிந்ததே...
இருந்தாலும் கென்னடி - மர்லின் நெருக்கம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில்.












Click it and Unblock the Notifications