தொடரும் ரூபாய் மதிப்பு சரிவு...எப்படியும் மீண்டு விடும்: ப.சிதம்பரம் நம்பிக்கை

அமெரிக்க டாலருக்கு சமமான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. கடந்த 11-ந் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலர் ரூ.58.96 என்ற நிலைக்கு வீழ்ச்சி கண்டது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதால் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும். நாட்டின் பொருளாதாரத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருவது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பொருளாதார துறையில் மேலும் சீர்திருத்தங்களை செய்யப்போகிறோம். அடுத்த சில நாட்களில், வாரங்களில் எண்ணற்ற முக்கிய முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த ஜூன் மாதத்தில் எத்தனையோ முடிவுகள் எடுக்கப்பட்டு, அமல்படுத்தப்படும். அவை பொருளாதார சீர்திருத்தங்களை விரைவுபடுத்தும். நிலக்கரி, எரிவாயு விலை நிர்ணயம் செய்தல், மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்தல், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீடு ஈர்ப்பது போன்றவற்றில் முக்கிய முடிவு எடுக்கப்படும்.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருவதைப் பார்த்து பதற்றம் அடையத் தேவை இல்லை. நடப்பு கணக்கு பற்றாக்குறையால் தத்தளிக்கிற பல நாடுகளில் நாணய மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது. ரூபாய் தனக்கான நிலையை அடையும். கடந்த சில நாட்களாக கண்டு வந்த வீழ்ச்சியிலிருந்து ரூபாயின் மதிப்பு மீண்டும் அதிகரிக்கும். தங்கத்தின் இறக்குமதி குறைந்திருப்பது திருப்தி தருகிறது என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications