பெட்ரோலிய அமைச்சர்களை எண்ணெய் நிறுவனங்கள் மிரட்டுகின்றன: வீராப்ப மொய்லி

எண்ணெய் இறக்குமதியை குறைத்திட வேண்டும். இதன்மூலம் உள்நாட்டு பணம் வெளிநாட்டுக்கு செல்வதை தடுக்க முடியும். என்னை எந்த நிறுவனமும் மிரட்ட முடியாது. நமது நாட்டு பணம் வெளிநாட்டுக்கு கொள்ளை போவதை நான் அனுமதிக்க மாட்டேன்.
எண்ணெய் நிறுவனங்களின் மிரட்டல் காரணமாக இந்தியாவிற்கு 160 பில்லியன் டாலர் (இறக்குமதி) இழப்பு ஏற்பட்டுள்ளது. தன்னையும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மிரட்டியதாகவும் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்
உள்நாட்டில் எரிவாயு விலையை உயர்த்திட வேண்டும். இந்த எண்ணெய் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய எண்ணெய் மற்றும் எரிவாயு விலை எதுவும் உயர்த்தும் எண்ணம் இல்லை. ரூபாய் மதிப்பு சரிவு குறுகிய காலத்தில் சரியாகிவிடும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சரின் இந்த கருத்து டெல்லி வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசு, அமைச்சரின் இந்த திடீர் கருத்தால் குழப்பம் அடைந்துள்ளது.
வீரப்ப மொய்லியின் பேச்சுக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது போன்று எந்த அமைச்சர்கள் மிரட்டப்பட்டனர் என கூற முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளன.












Click it and Unblock the Notifications