டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு உலகிலேயே 2வது சிறந்த விமான நிலைய விருது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகிலேயே 2வது சிறந்த விமான நிலையம் என்ற பெருமையை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் பெற்றுள்ளது. இதற்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.

முதல் இடத்தை தென் கொரியாவின் சியோல் விமான நிலையம் பெற்றுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் வருடத்திற்கு 2.5 முதல் 4 கோடி பேர் வரை வந்து செல்கிறார்களாம்.சர்வதேச விமான நிலைய கவுன்சில் இதை அறிவித்துள்ளது.

199ல் ஒன்று டெல்லி

199ல் ஒன்று டெல்லி

உலகம் முழுவதும் உள்ள 199 விமான நிலையங்கள் இந்த தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

ஒட்டுமொத்தமாக 4வது இடம்

ஒட்டுமொத்தமாக 4வது இடம்

தற்போதைய கணக்கெடுப்பானது 2.5 முதல் 4 கோடி பயணிகளுக்கான பிரிவுக்கானது. அதேசமயம், ஒட்டுமொத்த பிரிவில் டெல்லிக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

5.50 லட்சம் டன் சரக்கு

5.50 லட்சம் டன் சரக்கு

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஆண்டுக்கு 5.50 லட்சம் டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. 3 லட்சம் விமான போக்குவரத்து நடக்கிறது.

விருதைப் பெற்ற 9 பேர் குழு

விருதைப் பெற்ற 9 பேர் குழு

இதுதொடர்பான விருது வழங்கும் விழா துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்தது. அதில் டெல்லி விமான நிலைய்தைச் சேர்ந்த 9 பேர் கொண்ட குழு கலந்து கொண்டு விருதைப் பெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+