இந்தியாவின் புகழ்பெற்ற தந்தைகள்: ஷாருக்கான் 1... அமிதாப் 2.... சச்சின் 3வதுஇடம்!
மும்பை: உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியாவின் பிரபலமான தந்தையாக இந்தி நடிகர் ஷாரூக் கான் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஆர்யன் என்ற மகனும், சுஹானா என்ற மகளும் இருக்கின்றார்கள். சிறந்த தந்தை மகன் உறவு முறையிலும் அவர்களே முன்னிலையில் உள்ளனர்.
சாதி.காம் என்ற தனியார் நிறுவனம் உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் பிரபலமான தந்தை யார்? மற்றும் தந்தை- மகன் - மகள் உறவு முறை குறித்து மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் பின்வரும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஷாரூக்கான் முதலிடம்...
சுமார், 11,000 பெண்கள் கலந்து கொண்ட இந்த வாக்கெடுப்பில் 34.83 சதவீகித வாக்குகளை பெற்று ஷாருக்கான் முதலிடம் பெற்றுள்ளார். 31.58 சதவிகிதம் பெற்ற அமிதாப்பச்சன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 18.61 சதவிகிதம் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

பிரபலத் தந்தைகள்...
இது குறித்து சாதி.காமின் நிர்வாக இயக்குனர் கவ்ரவ் ரட்சித் கூறும்போது, "இந்த நிகழ்ச்சியின் முடிவுகள் ஆண்கள் பிரபலமாக இருந்தாலும், தங்களின் அர்ப்பணிப்பு, அன்பு போன்றவற்றினால் தான் பிரபலமான தந்தையும் ஆகின்றார்கள் என்பது தெரியவருகிறது. மேலும், புகழ் பெற்று விளங்குபவர்களையும் மக்கள் தங்களைப் போலவே சக மனிதர்களாகவே பார்க்கின்றார்கள்" என்றார்.

தந்தை - மகள்- மகன்....
தந்தை, மகன், மகள் உறவுகள் குறித்த மேலும் சில கேள்விகளையும் கருத்துக் கணிப்பில் இந்த நிறுவனம் கேட்டிருந்தது. அதில், சிறந்த தந்தை-மகள் உறவிற்கு அமிதாப் பச்சனும், அவரது மகள் சுவேதாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், சிறந்த தந்தை-மகன் உறவிற்கு ஷாருகான், ஆர்யனும் அவர்களது தேர்வாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications