'சிக்கன்' கிடைக்காமல் மக்கள் தவிப்பு.. ஆட்டுக்கறிக்கு கிராக்கி- விலையும் ஏறியது!

கோழி இல்லாததால் ஆட்டுக்கறிக்கும், மீனுக்கும் மக்கள் தாவினர். ஆனால் இவற்றின் விலை அதிகமாக இருந்ததால் மக்கள் டென்ஷனாகி விட்டனர். பிராய்லர் கோழி முட்டை விலையும் கூட இன்று உயர்ந்து காணப்பட்டது.
சென்னையில் நேற்று கோழிக்கறிக் கடைகள் திடீர் ஸ்டிரைக்கில் இறங்கின. அதாவது கோழிக்கறி விற்பனையைப் புறக்கணித்தனர் வியாபாரிகள். பிராய்லர் கோழி உற்பத்தியாளர்கள் வேண்டும் என்றே உற்பத்தியைக் குறைத்து விட்டு செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்தி, விலையை உயர்த்துவதாக கோழிக்கறி விற்பனையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்குத் தங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்பது வியாபாரிகளின் குற்றச்சாட்டாகும்.
இந்த ஸ்டிரைக் காரணமாக சென்னையில் நேற்று கோழிக்கறி விற்பனை சுத்தமாக பாதிக்கப்பட்டது. ஆனால் நேற்று ச னிக்கிழமை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு தெரியவில்லை. அதேசமயம், ஞாயிற்றுக்கிழமையான இன்றுதான் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
பையைத் தூக்கிக் கொண்டு கோழிக்கறி வாங்கக் கிளம்பியவர்களுக்கு கோழிக்கறி கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. பெரும்பாலான இறைச்சிக் கடைகளில் கோழிக்கறி இல்லை என்று கூறப்பட்டதால் மக்கள் ஏமாற்றத்திற்குள்ளாகினர்.
கோழிக்கறிக்குப் பதில் ஆட்டுக்கறிக்கு மக்கள் மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அதன் விலையும் உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ. 440 முதல் 480 வரை விற்றது.
மீன் விலையும் கூட இன்று உயர்ந்தே காணப்பட்டது. அதேபோல கோழி முட்டை விலையும் உயர்ந்திருந்தது.
இது 2 நாள் ஸ்டிரைக்தான். எனவே நாளை முதல் மீண்டும் கோழிக்கறி விற்பனை தொடங்கும் என வியாபாரிகள் கூறியுள்ளனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications