மணிவண்ணன் ஒரு திறமையான இயக்குநர்: கருணாநிதி புகழாரம்
சென்னை: ஐம்பது படங்களை இயக்கியவரும், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திர மற்றும் காமெடி வேடங்களில் கலக்கியவருமான இயக்குநர் மணிவண்ணன் நேற்று காலை மாரடைப்பால், அவரது இல்லத்தில் உயிர் நீத்தார்.
அன்னாரது மறைவுக்கு திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களும், அரசியல் பிரமுகர்களும் மற்றும் இன்னும் பிற முக்கிய பிரமுகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
மணிவண்ணனின் மறைவு குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் கடந்த சில ஆண்டுக் காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்து இன்று காலையில் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
நான் திரைக்கதை, உரையாடல் எழுதிய 'பாலைவன ரோஜாக்கள்' என்ற படத்தினை இயக்குனர் மணிவண்ணன் மிகவும் திறம்பட இயக்கி, அந்தப் படம் வெற்றிகரமாக தமிழகத்திலே ஓடிய நேரத்தில், அவருடன் நான் நெருங்கிப் பழகியதால், எப்படிப்பட்ட திறமையாளர் அவர் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
அண்மையில் நான் திரைக்கதை, உரையாடல் எழுதிய 'இளைஞன்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அப்போதே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததை என்னிடம் தெரிவித்தார். திறமையான ஒருவர் திடீரென்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவருடைய மறைவு குறித்து வருந்துவதோடு, அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்பட உலகைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications