’ரா’ நிறுவனர்களில் ஒருவரான பி. ராமன் காலமானார்!

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பற்றி விவாதிக்கும், எழுதுகிற அனைவருமே பி. ராமன் என்ற மூத்த ஆய்வாளரின் கருத்தை அறியாமல் தாண்டிச் சென்றுவிட முடியாது. மத்திய கேபினட் செயலகத்தில் கூடுதல் செயலராகப் பணியாற்றியவர் பி.ராமன். 1968ஆம் ஆண்டு நாட்டின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான ரா வை உருவாக்கியவர்களில் பி.ராமனும் ஒருவர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் Institute for Topical Studies என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் இயக்குநராகப் பணியாற்றினார்.
இணையதளங்களும் சமூக வலைதளமும் தவிர்க்க முடியாத அங்கமாகிப் போக அத்தனையிலும் தமது கருத்துகளை முன்வைத்து வந்தார் பி. ராமன். ramanstrategicanalysis.blogspot.com என்ற வலைப்பூவில் தமது சிந்தனைகளை பதிவு செய்த அவர், தொடர்ந்தும் தம்மைத் தாக்கிய கேன்சர் நோய் பற்றியும் அப்டேட் செய்து வந்தார். கடைசியாக மே14-ந் தேதி தமது வலைப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். எல்லை கடந்த பயங்கரவாதம், சீனாவின் மேலாதிக்கம், தென்னாசிய நாடுகளின் விவகாரங்கள் என வாழ்நாள் முழுவதும் தாம் நேசித்து ஆற்றிய பணி பற்றியே சிந்தித்தவர் அவர்.
இதேபோல் ட்விட்டர் தளத்தையும் முழுமையாக பயன்படுத்தினார் பி.ராமன். கடந்த 29-ந் தேதி ட்விட்டர் பக்கத்தில் தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பதிவிட்ட அவர், 30-ந் தேதியன்று தாம் நலமுடன் வீடு திரும்புவேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் சென்னையில் காலமானார்.
பி. ராமன் மறைந்தாலும் அவர் எழுதிய நூல்களும் கட்டுரைகளும் எப்போதும் நம்முடன் பயணிக்கும்!
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications