இன்று வாஞ்சிநாதன் நினைவுநாள்: மாணவ, மாணவியர் வீர அஞ்சலி
நெல்லை: செங்கோட்டையில் இன்று வீரவாஞ்சிநாதனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த வீரவாஞ்சிநாதன் ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற தினமான ஜூன் 17ம் நாள் வீரவணக்க நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களை அன்றைய ஆங்கிலேய அரசு அடக்கு முறையால் ஒடுக்கியும், அடக்கியும் வந்தது. இதை எதிர்த்து ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட திட்டமிட்ட வீரர்களில் வீரவாஞ்சிநாதனும் ஒருவர். இந்திய சுதந்திரத்திற்காக போராடிய பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும் சிறையில்.அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் அப்போதைய நெல்லை கலெக்டர் ஆஷ்துரை துப்பாக்கிக்சூடு நடத்த உத்தரவிட்டார். இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனால் வெகுண்ட வாஞ்சிநாதனும், சாவடி அருணச்சல பிள்ளையும் சேர்ந்து ஆஷ் துரையை சுட்டுக் கொல்ல திட்டமிட்டனர். அதன்படி 1911ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா புறப்பட்ட கலெக்டர் ஆஷ்துரையையும், அவரது மனைவியையும் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து வீரவாஞ்சி சுட்டுக் கொன்றார். பின்னர் அதேதுப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டு களமரணம் அடைந்தார். வீரவாஞ்சிநாதன் மரணம் அடைந்த ஜூன் 17ம் தேதியில் ஆண்டுதோறும் செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் நடுக்கல்லுக்கு வீரவணக்கம் செலுத்தும் விழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டும் இன்று காலை 10.50 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகள், சர்வ கட்சியை சேர்ந்தவர்களும் வீரவாஞ்சிநாதனுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் வாஞ்சிநாதனின் தம்பி மகன் ஹரிஹர சுப்ரமணியன், வாஞ்சி பேரன் வாஞ்சி சுப்பரமணியன், வாஞ்சி இயக்க நிறுவனர்.ராமநாதன், அதிமுக நகர செயலாளர் தங்கவேல், துணை செயலாளர் ராஜா, நகரமன்ற துணை தலைவர் கணேசன், கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சித்திக், நல்லாசிரியர் சுப்பையாக் கோனார், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் மகேஷ்வரன், குத்தாலிங்கம், மதிமுக சங்கர நாராயணன், பிராமணர் சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications