நிஜ ‘பேய்ப் பெண்’ இவர் தான்... மெக்சிகோவில் வசிக்கிறார்

Subscribe to Oneindia Tamil

மெக்சிகோ: பெண்ணெண்றால் பேயும் இரங்கும்' என்பார்கள், ஆனால் ஒரு பெண்ணே பேய் உருவத்தில் மாறிய விநோதம் மெக்சிகோவில் அரங்கேறியுள்ளது.

பொதுவாக அழகு விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டும் பெண்கள், தங்கள் அழகைக் கூட்டிக் கொள்ளத்தான் அதிக ஆப்பரேஷன்களைச் செய்துள்ளார்கள் என நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், அழகான உருவத்தை சிதைத்து அசிங்கமான பேயாக தன்னை மாற்றிக் கொள்ள ஆபரேஷன் செய்து கொண்டுள்ளார் இப்பெண்.

அதுவும் ஒன்றிரண்டு ஆபரேஷன் அல்ல...

பேய்ப் பெண்...

பேய்ப் பெண்...

மெக்சிகோவைச் சேர்ந்த மரியா ஜோஸ் கிறிஸ்டினா என்ற 37 வயதான பெண்ணே இப்படி ஆப்பரேஷன் மூலம் தன்னை பேயாக்கியவர். இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டாட்டூஸ் பிரியை...

டாட்டூஸ் பிரியை...

மரியா ஜோஸ்ன் உடலில் 90 சதவீதத்திற்கும் அதிக அளவில் டாட்டூஸ் விதவிதமாக குத்தப்பட்டுள்ளது. மேலும் உடலின் பல பாகங்களை ஆபரேஷன் மூலம் விகாரமாக மாற்றியுள்ளார்.

நீ நிஜமாலுமே ரத்தக் காட்டேறியா...

நீ நிஜமாலுமே ரத்தக் காட்டேறியா...

தான் செல்லும் இடங்களிலெல்லாம் அவரை வழி மறித்து மக்கள், ‘நீங்கள் ஒரு நிஜ ரத்தக் காட்டேறியா?' எனக் கேட்பது இவரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். ஆனால், இவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இவருடன் வெளியில் செல்லவே அஞ்சுகிறார்களாம். காரணம் வளைந்து கட்டி ரசிகர்கள் ஆட்டோகிராப் மற்ரும் போட்டோகிராப் கேட்டு அன்புத்தொல்லை கொடுக்கிறார்களாம்.

கலை ஆர்வம்...

கலை ஆர்வம்...

தன் குழந்தைகளுக்கு சரியான தாயாக இருந்து, சரியாக வழி நடத்துவதாக பெருமையுடன் கூறிக் கொள்ளும் மரியா ஜோஸ், தன் ஓய்வு நேரங்களில் தையல், சமையல் மற்றும் கலைப் பொருட்களைச் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவாராம்.

அம்மா நினைவாக...

அம்மா நினைவாக...

உடம்பில் குத்தியுள்ள நட்சத்திர டேட்டூஸ், அவரது தாயின் நினைவாக குத்தியதாம். மரியா சிறு வயதாக இருக்கும் போது, அவர் தாய் அதிக நட்சத்திரங்களைக் காட்டி கதை சொல்லியுள்ளாராம். அதன் தாக்கமாகத் தான் இந்த நட்சத்திர டாட்டூஸ்.

வெற்றி நிச்சயம்...

வெற்றி நிச்சயம்...

டாட்டூஸ் பார்லர் வைத்து பெரிய தொழிலதிபராக வர வேண்டும் என்பது தான் மரியாவின் எதிர்கால லட்சியமாம். அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள மரியா, அத்தொழிலில் தான் வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கையுடன் பேசுகிறார்.

மறுவாழ்வு ஆலோசகர்...

மறுவாழ்வு ஆலோசகர்...

மதுவுக்கு அடிமையான கணவருடன் பத்தாண்டு காலம் வாழ்ந்த துயர வாழ்க்கையின் பலனாக, தான் கற்றுக் கொண்ட பாடத்தை தன்னைச் சுற்றியுள்ள பெண்களுக்கு சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். மரியா ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

230 ஆபரேஷன்...

230 ஆபரேஷன்...

தன்னை அகோரமாக்கிக் கொள்ள இதுவரை கிட்டத்தட்ட 230க்கும் மேற்பட்ட ஆபரேஷன்களைச் செய்து கொண்டுள்ள மரியா, உடம்பின் பல பகுதிகளை மாற்றி அமைத்து விட்டார். பற்கள் கூட இவரது ஆபரேஷனுக்குத் தப்பவில்லை. முன் நெற்றியில் வளையங்கள் மாட்டிக் கொண்டு, பேஷன் என்கிறார்.

எப்டி இருந்த நான்...

எப்டி இருந்த நான்...

ஆரங்சு வண்ண முடியோடு, அகோர உருவத்தோடு, விநோத உடையோடு இருக்கும் மரியாவின் முந்தைய படத்தை நீங்கள் நிச்சயம் பார்த்தே ஆக வேண்டும். இதோ... அந்த அழகி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+