பலாத்காரம் செய்து கல்லூரி மாணவி கொலை: பைக்கில் சென்று ஆறுதல் சொன்ன மம்தா!

கொல்கத்தா அருகே உள்ள கம்துனி கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி கடந்த 7ம் தேதி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் 6 பேரைக் கைது செய்துள்ளனர். ஏழை மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போலீஸ் வாகனங்களும் தாக்கப்பட்டன.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஹாஜி நூருல் இஸ்லாம் வந்தார். அவரை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவரது வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இன்று அந்த கிராமத்திற்குச் சென்றார். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து, சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த மம்தா, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அங்கு மாணவியின் பெற்றோருக்கு மம்தா ஆறுதல் கூறினார்.அங்கிருந்து புறப்பட்ட மம்தாவை கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர். அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக குற்றம்சாட்டிய அவர்கள், மம்தாவிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மம்தா, மக்களை திட்டி காட்டமாக பேசினார். மாணவி பலாத்கார கொலை வழக்கில் மார்ச்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஆவேசமாக கூறிய அவர், பின்னர் சமாதானம் செய்த மம்தா, அப்பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க திட்டமிட்டிருப்பதாக கூறினார்.
-
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை.. பெண்களுக்கு இனி மாதம் ₹3000 உதவி.. அறிவித்த மேற்கு வங்க அரசு! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications