தமிழகம்- 2 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்

நேற்று முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரவையில் மாற்றத்தை மேற்கொண்டார். அதன்படி தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் பிற்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகம்மது ஜான் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
அவர்களுக்குப் பதில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.பி.சண்முகநாதன், ஆவடி தொகுதி எம்.எல்.ஏ. அப்துல்ரகீம் ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். புதிய அமைச்சர்கள் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 4.45 மணிக்கு பதவி ஏற்றனர்.
முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இரு அமைச்சர்களுக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
சண்முகநாதன், சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழக அமைச்சராக பதவியேற்றுள்ளார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், வெளிநாட்டு இந்தியர்கள், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டோர் மற்றும் வக்பு உள்ளிட்ட சிறுபான்மையினர் துறை எஸ்.அப்துல்ரகீமிடம் ஒப்படைக்கப்படுகிறது.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு












Click it and Unblock the Notifications