ஜி20 மாநாட்டில் பிற நாட்டு தலைவர்களை பிரிட்டன் உளவு பார்த்தது அம்பலம்!
லண்டன்: 2009-ம் ஆண்டு பிரிட்டனில் நடந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிற நாட்டுத் தலைவர்களின் செயல்பாடுகளை பிரிட்டன் உளவுத்துறை ரகசியமாக கண்காணித்து வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் ஆர்ஜெண்டீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
சமீபத்தில், அமெரிக்காவின் டெலிபோன் ஒட்டுக் கேட்பு முதலிய ரகசிய உளவு வேலைகள் குறித்த ரகசியங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய அமெரிக்க உளவு அமைப்பான் சிஐஏவின் முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென் தான் தற்போது இத்தகவலையும் தெரிவித்துள்ளார்.
2009-ம் ஆண்டு ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் லண்டனில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில், 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி தொடர்பாக விவாதித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
2009ம் ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்ற அப்போதைய ரஷிய அதிபர் திமித்ரி மெத்வதேவ், மாஸ்கோவில் உள்ள தலைவர்களுடன் செயற்கைக்கோள் தொலைப்பேசியில் பேசியுள்ளார். அதையும் இடைமறித்துக் கேட்க அமெரிக்க உளவுத் துறை மேற்கொண்ட முயற்சி தற்போது அம்பலமாகியுள்ளது.
பிரிட்டனின் உளவு அமைப்பான ஜி.சி.எச்.க்யூ., அம்மாநாட்டில் பங்கேற்ற அனைத்து வெளிநாட்டுத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ரகசியமாக பதிவு செய்து வைத்துள்ளது. மேலும், அவர்களின் இ-மெயில் மற்றும் அவர்களின் லேப்டாப்களில் உள்ள ரகசியங்களும் திருடப்பட்டுள்ளன.
மாநாட்டுக்கு வந்திருந்தவர்களின் வசதிக்காக, சிறப்பு இன்டர்நெட் மையங்களை அமைத்த பிரிட்டன் உளவுத் துறை, அதன் மூலமே, ரகசியங்களைத் திருடி உளவு பார்த்துள்ளது. ஆனால், வில்லாதி வில்லன்களாக சில பிரதிநிதிகள், தாங்கள் அனுப்பும் இ-மெயில்களை மற்றவர்கள் பார்த்துவிடாதபடி தந்திரமாகவும் அனுப்பி வைத்து இவர்களை கலங்கடித்துள்ளனர்.
மாநாட்டில் கலந்து கொண்ட பிற நாட்டுத்தலைவர்கள், யார் யாருடன் என்ன பேசுகிறார்கள் என்பதை கண்காணிக்க மட்டும் 45 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது பிரிட்டன் உளவுத் துறை. அதிலும் குறிப்பாக துருக்கி நிதியமைச்சர் மெஹ்மத் சிம்செக், தென்னாப்பிரிக்க தலைவர்கள் உள்ளிட்ட 15 பேரது செயல்பாடுகள் மட்டும் தீவிரமாகக் கண்காணிக்கப் பட்டுள்ளது.
ஜி8 நாடுகளின் மாநாடு தற்போது பிரிட்டனில் திங்கள்கிழமை தொடங்கி நடை பெற்று வருகிறது. அதில் இப்பிரச்சினைக் குறித்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் விளக்கமளிக்க வேண்டுமென பிறநாட்டுத் தலைவர்களால் வலியுறுத்தப் படுவார் என நம்பப்படுகிறது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications