நான் யாரு எனக்கே தெரியலையே - புலம்பும் ஜாக்சன் மகள்
லாஸ் ஏஞ்சலெஸ்: என் தந்தை மைக்கேல் ஜாக்சன் இல்லையா. அப்படியானால் எனது உண்மையான தந்தை யார்? என்ற பெரும் வேதனை மற்றும் குழப்பத்தில் இருக்கிறாராம் மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ். இந்த வேதனையில்தான் அவர் தற்கொலைக்கும் முயன்றாராம்.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தற்போது தேறி வருகிறார் பாரிஸ் ஜாக்சன். இன்னும் ஒரு மாதத்திற்கு அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டுமாம்.
பாரிஸ் தற்கொலைக்கு முயன்றது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் தனது தந்தை யார் என்ற குழப்பம் தந்த வேதனையில்தான் அவர் தற்கொலைக்கு முயன்றது உறுதியாகியுள்ளது.

ஆளுக்கு ஒரு தந்தையா
தனது தம்பி பிரின்ஸுக்கும், தனக்கும் ஒரே தந்தை இல்லை என்ற செய்தி பாரிஸை வேதனைப்படுத்தி விட்டதாம்.

அப்பா இல்லை என்பது முன்பே தெரியும்
மைக்கேல் ஜாக்சன் தனது ஒரிஜினல் தந்தையாக இருக்க முடியாது என்பது முன்பே பாரிஸுக்கு ஓரளவு தெரிந்திருந்ததாம்.

ஆனால் தம்பியும் இல்லையா
ஆனால் தனது தம்பியான பிரின்ஸ் தன்னுடன் பிறந்தவன் இல்லை என்ற தகவல் அவரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாம்.

உண்மை தெரிந்து சிதறிப் போனார்
அப்பாவும் அசல் இல்லை, தம்பியும் உடன் பிறந்தவன் இல்லை என்ற இரட்டைத் தாக்குதலால்நிலைகுலைந்து சிதறிப் போய் விட்டாராம் பாரிஸ்.

மாத்திரை சாப்பிட்டு - கையை அறுத்து
இந்த வேதனையில்தான் தனது மணிக்கட்டின் நரம்புகளைத் துண்டித்தும், தூக்க மாத்திரை சாப்பிட்டும் தற்கொலைக்கு அவர் முயன்றுள்ளார்.

பாட்டிதான் ஆறுதல்
பாரிஸ் தனது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையுமே சமீபகாலமாக வெறுத்து ஒதுக்கி வந்தாராம். பாட்டி கேத்தரின் ஜாக்சனுடன் மட்டுமே பாசம் காட்டி வந்தாராம்.












Click it and Unblock the Notifications