பார்ட்டி, பிரார்த்தனை கூட்டம், வாக்கிங் போகும் பெண்களை குறிவைக்கும் பாஜக
டெல்லி: பெண் வாக்காளர்களை கவர அவர்கள் செல்லும் பார்ட்டிகள், பிரார்த்தனை கூட்டங்கள் ஆகியவற்றுக்கு சென்று டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளதாக டெல்லி பாஜக தலைவர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.
கட்சி கூட்டங்களுக்கு பெண்கள் அவ்வளவாக வருவதில்லை. இந்நிலையில் அனைத்து தரப்பு பெண் வாக்காளர்களையும் சந்தித்து கட்சி பற்றியும், முன்னேற்ற திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூற டெல்லி பாஜக முடிவு செய்துள்ளது. மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து வரும் டெல்லி அரசு பற்றியும் பெண்களிடம் தெரிவிக்க இருப்பதாக டெல்லி பாஜக தலைவர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.
அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த பெண்களை எங்கெல்லாம் சந்தித்து டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் செய்வது என்பதையும் பாஜகவினர் தீர்மானித்துவிட்டனர்.

பார்ட்டி
பெண்கள் செல்லும் கிட்டி பார்ட்டிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளது பாஜக.

பிரார்த்தனை கூட்டங்கள்
பிரார்த்தனை கூட்டங்களுக்கு சென்றால் அங்கு வரும் பலதரப்பட்ட பெண்களையும் சந்தித்து கட்சியை பற்றி தெரிவிக்கலாம் என்று நினைக்கிறது பாஜக.

வாக்கிங்
நடைபயிற்சி செய்யும் பெண்களை சந்தித்து பிரச்சாரம் செய்யப் போகிறது பாஜக.












Click it and Unblock the Notifications