ராஜ்யசபா தேர்தல்: கனிமொழிக்கு ஆதரவு கோரி சோனியா காந்தியை சந்தித்த டி.ஆர். பாலு
Subscribe to Oneindia Tamil

பல ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தது திமுக. இந்நிலையில் ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக கடந்த மார்ச் மாதம் விலகியது. இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவு அளிக்கக் கோரி திமுக நாடாளுமன்ற தலைவர் டி.ஆர். பாலு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று டெல்லியில் சந்தித்து பேசினார்.
எந்த காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறினார்களோ தற்போது அதே காங்கிரஸ் ஆதரவை நாடி நிற்கிறது திமுக என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications