வத்தலக்குண்டு அருகே அரசு பள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 13 லேப்டாப்கள் திருட்டு
திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த லேப்டாப்களில் 13 லேப்டாப்கள் திருடுபோயுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் அய்யம்பாளையத்தில் என்.பி.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 140 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மாணவர்களுக்கு வழங்குவதற்காக 73 லேப்டாப்கள் வந்துள்ளன. இந்த லேப்டாப்கள் தலைமை ஆசிரியையின் அறையில் வைக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று காலை தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி பள்ளிக்கு வந்து தனது அறையை திறக்க சென்றார். அப்போது அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த லேப்டாப்களில் 13 லேட்டாப்கள் திருடு போனது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
உடனே இது குறித்து பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக முன்னாள் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 13 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications