புதுக்கோட்டையில் ஆட்டோ மீது தனியார் பஸ் மோதி 9 பள்ளிக் குழந்தைகள் பலி!! 3 பேர் கவலைக்கிடம்!!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதில் உயிரிழந்த பள்ளி குழந்தைகள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சியில் இருந்து இன்று காலை 12 மாணவர்களை தனியார் வாகனம் ஒன்று வல்லத்திராக்கோட்டை அரசுப் பள்ளிக்கு ஏற்றிச் சென்றது. அந்த வாகனம் அறந்தாங்கி சாலையில் வளநாடு என்ற இடத்தில் சென்ற போது தனியார் பேருந்து ஒன்று திடீரென அதன் மீது மோதியதுடன் மேலே ஏறி இறங்கியது.

அப்படியே அப்பளம் போல் நொறுங்கிய தனியார் வாகனத்தில் இருந்த 12 பள்ளிக் குழந்தைகளில் 6 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பள்ளிக் குழந்தைகளில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் 3 பேர் உயிரிழந்தனர். மற்ற 3 பள்ளிக் குழந்தைகள் தஞ்சாவூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்களது உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.
வாகன விபத்தில் 9 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications