பரபர ராஜ்யசபா தேர்தல்.. திமுகவுக்கு 'அதிமுக'வின் மனித நேய மக்கள் கட்சி ஆதரவு!

தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக அணியில் 5 பேரின் வெற்றி உறுதியாகிவிட்டது. 6வது எம்.பி. இடத்துக்கு திமுகவும் தேமுதிகவும் மோதுகின்றன. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் எப்படியும் வென்றுவிடலாம் என்று நம்பியது திமுக.
ஆனால் தேமுதிகவை ஆதரிப்பதிலேயே காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. இதனால் 3 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தலா 2 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சிகள் பக்கம் திமுக கவனத்தைத் திருப்பியது.
பாமக இளைஞரணித் தலைவருடன் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசியிருந்தார். இந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏக்களான ஜவாஹிருல்லா மற்றும் ஆம்பூர் அஸ்லாம் ஆகியோர் இன்று திடீரென திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா, ராஜ்யசபா தேர்தலில் தாமும் மற்றொரு எம்.எல்.ஏவும் திமுக வேட்பாளரை ஆதரிப்போம் என்றார்.
மனித நேய மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் காங்கிரஸ் உருவாக்கிய நெருக்கடியில் இருந்து சற்றே மீண்டிருக்கிறது திமுக. மேலும் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது மனிதநேய மக்கள் கட்சி. தற்போது திமுக அணியில் இணைந்திருப்பதன் மூலம் எதிர்வரும் லோக்சபா தேர்தலில் திமுக அணியிலேயேதான் அக்கட்சி நீடிக்கும் எனத் தெரிகிறது.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது? -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
வேட்பு மனு தாக்கலின்போதே திமுக தவெக கட்சியினர் மோதல்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு! -
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை வாகனத்தை நெருங்கி வந்த போலீசார்.. திடீரென ரெய்டு! ராமநாதபுரத்தில் சலசலப்பு -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
“எடப்பாடி பழனிசாமி இரட்டை விரலை காட்டுவது ஏன் தெரியுமா?” - உதயநிதி ஸ்டாலின் சொன்ன மேட்டர்! -
“படத்தில் விஜயகாந்துக்கு வாக்கு கேட்டேன்.. இன்று அவரது மகனுக்கு ஓட்டு கேட்கிறேன்" - ஸ்டாலின் பேச்சு -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
பிரிட்ஜை விடுங்க! ரூ 8000 கூப்பனில் பெரிய கிரைண்டரை வாங்குங்க! சுய தொழில் செய்ங்க! கனிமொழி ஐடியா












Click it and Unblock the Notifications