ஒரு சதவீதம் மார்க் குறைவு- விளையாட்டுப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட மாணவி தகுதியிழந்தார்!

விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குவோருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 3 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் எம்.பி.பி.எஸ். படிப்பு விளையாட்டுப் பிரிவுக்கு உரிய 3 இடங்களுக்கு 5 மாணவர்கள் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு நேற்று முன்தினம் அனுப்பியது.
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் விளையாட்டில் சிறந்து விளங்குவோர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் ஆகிய சிறப்புப் பிரிவினரை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதற்கான கலந்தாய்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பிய பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற மாணவி நித்யலட்சுமியின் மதிப்பெண் சான்றிதழை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் சரி பார்த்தபோது வேதியியல் பாடத்தில் தகுதி மதிப்பெண் ஒரு சதவீதம் குறைவாக 59% மட்டும்தான் இருந்தது. இதனால் அவர் தகுதி இழந்தார்.
விளையாட்டுப் பிரிவில் பி.டி.எஸ். படிப்புக்கு ஒதுக்கீடு இல்லாததால் நித்யலட்சுமியின் மருத்துவ படிப்பு ஆசை நிறைவேறவில்லை. மாற்றத் திறனாளிகள் பிரிவில் பாதிப் பேர் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் இடம் கிடைக்காமல் வீடு திரும்பினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications