சிறுநீர் கழிக்க டாய்லெட் போக வேண்டாம்... ஜப்பான் பெண்களுக்கான டயாபர் ரெடி
டோக்கியோ: பாத்ரூம் போய் சிறுநீர் கழிக்கத் தெரியாத குழந்தைகளுக்கு டயாபர் பயன்படுத்துவோம். அதேபோல் படுக்கையில் இருக்கும் வயதானவர்களுக்கு டயாபர் போட்டு விடுவோம். ஆனால் ஜப்பானில் இளம் பெண்கள், பணிபுரியும் பெண்கள் பயன்படுத்தும் டயாபர்கள் விற்பனைக்கு வந்துள்ளனவாம்.
இளம் பெண்கள் அதிக அளவில் டயாபர் பயன்படுத்துவதனால் புது ட்ரெண்ட் உருவாகிவருகிறது. அனைத்து கடைகளிலும் டயாபர் விற்பனை சூடு பிடித்துள்ளது.

கடுமையான உழைப்பாளிகள்
ஜப்பானில், இளம் பெண்கள் கடுமையான உழைப்பாளிகள். இப்படி, வேலைக்கு செல்லும் பெண்கள், தற்போது சிறுநீர் கழிக்கக் கூட நேரமின்றி உழைத்து வருகின்றனர்.

டயாபர் யூஸ் பண்றாங்க
சிறுநீர் கழிப்பதற்காக எழும் நேரத்தினைக் கூட அவர்கள் மிச்சமாக்க நினைக்கின்றனர். பாத்ரூம் போக அடிக்கடி எழுந்திருக்கவேண்டியிருக்குமோ, பாத்ரூம் சென்றால் நேரம் வீணாகிவிடுமோ என்று நினைத்து பெரியவர்களுக்கு விற்பனையாகும் டயாபர்களை, வாங்கி பயன்படுத்துகின்றனர்.

புது பேஷன் பரவுது
ஜப்பானில் டயாபர் பயன்படுத்தும் புது பேஷன் வெகு வேகமாக பரவி வருகிறது. இதனால், சிறுநீர் கழிக்க அடிக்கடி டாய்லெட்டுக்கு செல்ல வேண்டியதில்லை. அலுவலக நேரத்தில், நிறைய நேரம் இதனால் மிச்சமாவதாக நினைக்கின்றனர் அப்பெண்கள்.

விற்பனை படுஜோர்
எனவே இன்று, ஜப்பானில் அனைத்து கடைகளிலும், பெரியவர்களுக்கான டயாபர் விற்பனை வெகு ஜோராக நடக்கிறது. டயாபர் பயன்படுத்துவதால் ஜட்டி துவைக்கிற வேலை மிச்சம்ன்னு நினைச்சிருப்பாங்களோ? என்னவோ.












Click it and Unblock the Notifications