தலிபானுடன் பேசப் போகும் அமெரிக்கா... அமெரிக்காவுடன் பேச்சை நிறுத்தியது ஆப்கன்
காபூல்: தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராகி வருவதால் அதிருப்தியடைந்துள்ள ஆப்கானிஸ்தான் அரசு, அமெரிக்காவுடனான பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்துள்ளது.
2014ம் ஆண்டுடன் அமெரிக்காவின் பாதுகாப்புப் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக விலக்கிக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கு மேலும் அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருக்க வகை செய்யும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.
இந்த நிலையில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா திடீரென முடிவு செய்துள்ளது. இது ஆப்கானிஸ்தானை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. தலிபான்களால் கடும் பிரச்சினைகளையும், சவால்களையும், தீவிரவாத தாக்குதல்களையும் தினந்தோறும் சந்தித்து வரும் நிலையில், அமெரிக்கா, தலிபான்களுடன் பேசுவதை ஆப்கானிஸ்தான் விரும்பவில்லை.
இதையடுத்து அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்துள்ளது ஆப்கானிஸ்தான்.
இதுதொடர்பாக அதிபர் ஹமீத் கர்சாய் தலைமையில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் பேச்சுவார்த்தையை நிறுத்தி வைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டதாக கர்ஸாயின் செய்தித் தொடர்பாளர் அய்மால் பைசி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலே தலிபான்களுடனான பேச்சுவார்த்தை தொடர்பான ஆயத்தப் பணிகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இது ஆப்கானிஸ்தானை கடும் அதிருப்தியில் தள்ளியுள்ளது. குறிப்பாக அதிபர் கர்ஸாய் அமெரிக்கா மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இதனால்தான் பேச்சுவார்த்தையை நிறுத்தும் முடிவை அவர் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications