உலகக் காதலர்களே... உங்கள் காதலை உறுதிப்படுத்த இதோ ஓர் ‘லவ் லாக் ட்ரீ’...
மாஸ்கோ: 'உன்னை இதயத்துக்குள் வைத்து பூட்டி விட்டேன். சாவியைத் தொலைத்து விட்டேன்' என காதலர்கள் கவிதை பாடுவார்களே, அதை நிஜமாலுமே மாஸ்கோ போனால் பார்க்கலாம்.
மாஸ்கோவின் ஆற்றங்கரையில் பல காதல் பூட்டு மரங்கள் காணப்படுகின்றன. அதற்கு பெயரே லவ் லாக் ட்ரீ என்பது தான்.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஓடுகிறது மாஸ்கோ நதி. அதன் ஆற்றங்கரையின் ஓரம் லுஸ்கோவ் பாலம் அருகில், வரிசையாக முளைத்துள்ளன காதல் பூட்டு மரங்கள். நிஜமான இயற்கை மரங்கள் இல்லை அவை, இரும்பாலான செயற்கை மரங்கள்.

காதலின் உறுதி கூட....
2007-ல் யாரோ ஒரு காதல் மன்னன், ஒரே ஓர் இரும்பு மரத்தை இந்த நதிக்கரையோரம் நட்டு, 'காதலின் அடையாளமாகத் தங்கள் பெயரைப் பூட்டில் எழுதி இங்கு மாட்டலாம். அப்படிச் செய்தால், உங்கள் காதலின் உறுதி கூடும்' என எழுதி வைத்து விட, இப்போது அம்மரத்தில் இலைகளுக்குப் பதில் பூட்டுகள் காய்த்துத் தொங்குகின்றன.

ஒன்றில் ஆரம்பித்தது...
ஆரம்பத்தில் ஒரேஒரு மரம் தான் இருந்துள்ளது. காலப்போக்கில், காதலர்களின் தேவையை கருத்தில் கொண்டு மரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறதாம். தற்போது, பத்துப் பதினைந்து மரங்களோடு ஒரு குட்டித் தோட்டம் போல காட்சி அளிக்கிறது.

உங்கள் காதலை உறுதியாக்க...
சுற்றுலாப் பயணிகளைக் கவர நினைத்த அரசு, தற்போது இந்தக் காதல் பூட்டு சமாசாரத்தை சென்டிமென்ட்டாக புரொமோட் செய்து வருகிறதாம். ‘ இங்கு வந்து காதல் பூட்டுப் போட்டுவிட்டால் எந்த அந்நிய சக்தியாலும் உங்கள் காதலைப் பிரிக்க முடியாது' என அரசே நம்பிக்கை வாசகங்களை எழுதிவைத்து, பாதுகாப்புக்கு போலீஸையும் நிறுத்தி வைத்திருப்பது தான் வேடிக்கை.

காசு பார்க்கும் வியாபாரிகள்...
காதலர்களைக் கவரும் வகையில் சிலர், இதய வடிவில் சிவப்புக் கலரில் பூட்டுகளை கலர்ஃபுல்லாக தயாரித்து மார்கெட்டில் விட்டு துட்டு பார்க்கிறார்கள் சில புத்திசாலி வியாபாரிகள்.

காதலர் தோட்டம்...
அதிக எண்ணிக்கையில் காதலர்கள் இங்கு வரத் தொடங்கி இருப்பதால், லவ் லாக் ட்ரீ தோட்டத்தை விரிவு படுத்தும் சிந்தனையில் இருக்கிறதாம் அரசு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications