பாஜக இந்துத்துவாவை பின்பற்றும் வரை கூட்டணி தொடரும்: சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே
மும்பை: பாஜக இந்துத்துவாவை பின்பற்றும் வரை அதனுடனான கூட்டணி நீடிக்கும் என்று சிவ சேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சிவ சேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இதையடுத்து உத்தவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
சிவ சேனாவுடனான கூட்டணி தொடரும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பாஜக இந்துத்துவாவை பின்பற்றும் வரை இந்த கூட்டணி நீடிக்கும் என்று நான் தெரிவித்தேன். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எந்த மதச்சார்பின்மையை பற்றி பேசுகிறார்? காஷ்மீரில் இருந்து பண்டிதர்கள் வெளியேற்றப்பட்டபோது மதச்சார்பின்மை பற்றி பேசுபவர்கள் எங்கே போனார்கள்? இந்துக்கள் பிரச்சனையில் இருக்கையில் அவர்கள் எல்லாம் எங்கு போனார்கள்?
ஒவ்வொரு கிராமத்திலும் சிவ சேனா குழு இருக்க வேண்டும். அதை பார்த்துவிட்டு பெண்களுக்கு தொல்லை அளிப்பவர்கள் மற்றும் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இனியும் அந்த குற்றங்களை செய்துவிட்டு தப்பிக்க முடியாது என்பதை உணர வேண்டும் என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications