நீங்க வருஷத்துக்கு 100 மணி நேரமா குளிப்பீங்க...??
லண்டன்: இங்கிலாந்தில் சராசரியாக ஒவ்வொருவரும் வருடத்திற்கு 100 மணி நேரத்தை பாத்ரூமிலேயே கழிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
மேலும் குளிப்பது குறித்துப் பேசி மேலும் பல மணி நேரத்தை சாப்பிடுகிறார்களாம் இங்கிலாந்துவாசிகள்.
இ ஆன் என்ற நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.

அவங்களும் குளிப்பாங்கப்பா
நம்ம ஊரில், வெள்ளைக்காரர்கள் குளிக்க மாட்டார்கள், குளிப்பதற்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள் என்று சின்னஞ் சிறு வயதில் நாமெல்லம் பேசிக் களித்திருப்போம். ஆனால் பாத்ரூமுக்கு இங்கிலாந்தில் நிறைய முக்கியத்துவம் தருகிறார்களாம்.

ஆனா லைட்டாதான் குளிப்பாங்களாம்
அதேசமயம், நீண்ட நேர குளியலை பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லையாம். அதாவது 20 சதவீதம் பேர் நீண்ட நேரம் குளிப்பது போர் என்று கூறியுள்ளனர்.

சேச்சே.. ஷவர் பாத் அலர்ஜிப்பா
15 சதவீத பெண்கள், நீண்ட நேரம் ஷவரில் இருந்தால் அலர்ஜியாகி விடும் என்று சொல்லி அலற வைத்துள்ளனர்.

19.5 நிமிடம் மட்டும்தான்
பாத்ரூமில் ஒவ்வொருவரும் சராசரியாக 19.5 நிமிடங்கள் இருக்கிறார்களாம்.

வாரத்துக்கு 5 ஷவர்.. 3 பாத்...
வாரத்திற்கு 5 முறை ஷவர் குளியல் போடுகிறார்களாம். 3 முறை சாதாரண குளியல் போடுகிறார்களாம்.

அங்கேயும் பெண்கள்தாங்க லீடிங்
பாத்ரூமில் அதிக நேரம் செலவிடுவதில் பெண்கள்தான் நமது நாட்டில் முன்னணியில் உள்ளனர். இங்கிலாந்திலும் அதே கதைதானாம். அதாவது சராசரியாக 9.5 நிமிடம் வரை பாத்ரூமில் இருப்பார்களாம்.

ஆண்கள் கொஞ்சம் ஃபாஸ்ட் பாஸ்
ஆண்கள் சீக்கிரமே குளித்து முடித்து விடுவார்களாம். அதாவது அவர்கள் 9 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறார்களாம். சோப்பு போடுவாங்களோ என்னவோ...

இளைஞர்களின் உலகமே பாத்ரூம்தானாம்
இளைய தலைமுறையினர்தான் பாத்ரூமில் அதிக நேரம் கழிக்கிறார்களாம். அதாவது 18 முதல் 24 வயதுடையவர்கள் சராசரியாக 13 முதல் 22 நிமிடம்வரை எடுத்துக் கொள்கிறார்களாம்.

தாத்தா, பாட்டிகளுக்கு 7 நிமிஷம் போதுமாம்
65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் ஷவரில் குளிப்பதாக இருந்தால் 7 நிமிடத்திலேயே பிரஷ்ஷாகி விடுகிறார்களாம். அதுவே உட்கார்ந்து குளிப்பதாக இருந்தால் 17 நிமிடம் ஆகுமாம்.

பாட்டு கேட்டுக்கிட்டே
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், பாட்டுக் கேட்டுக் கொண்டே குளிப்போம் என கூறியுள்ளனர்.

பாடிக்கிட்டேவும்
அதுவே ஐந்தில் ஒரு பங்கினர் பாடிக் கொண்டே குளிப்போம் என்று கூறியுள்ளனர்.
எத்தனை பேர் சோப்புப் போட்டு அழுக்குப் போக குளிப்பாங்கன்னு ஒரு கேள்வி கூட கேட்கவில்லை போல...
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications