உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய 40 தமிழர்கள் மீட்பு… எஞ்சியவர்களை மீட்க நடவடிக்கை
கேதார்நாத், உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த தொடர்மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்த தமிழக யாத்ரீகர்கள் 40 மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்டு, தமிழகத்திற்கு அழைத்து வரும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வடமாநிலங்களில், குறிப்பாக உத்தரகாண்டில் ஆன்மீகச் சுற்றுலா சென்ற ஆயிரக்கணக்கான பயணிகள் மழைவெள்ளத்தில் சிக்கித் தத்தளிக்கின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைபடி, தமிழகத்தைச் சேர்ந்த 399 பேர், உத்தரகாண்ட் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த ஊர் திரும்பினர்
இவர்களில் ஆன்மீகச் சுற்றுலா சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த 4 பேர் பத்திரமாக சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட புண்ணியத்தலங்களை தரிசிக்க திட்டமிட்டிருந்ததாகவும், மழை காரணமாக பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு பல சிரமங்களைக் கடந்து சென்னை திரும்பியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் 36 பேர், பல்வேறு சிரமங்களுக்கு இடையே டெல்லிக்கு சென்றுள்ளனர். ரிஷிகேஷ் சென்ற போது, மழை வெள்ளத்தில் சிக்கி அவதிப்பட்டாலும், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகளால் தாங்கள் பத்திரமாக திரும்ப முடிந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

359 தமிழர்கள்
உத்தரகாண்ட் மழை வெள்ளத்தில் இன்னும் 359 தமிழர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த உயர் மட்டக் குழு ஒன்றை தமிழக அரசு டேராடூனுக்கு அனுப்பியுள்ளது.
பயணிகள் குறித்த தகவல்களை அறிய டெல்லியில் தமிழ்நாடு இல்லத்திலும், சென்னையில் நிவாரண ஆணையர் அலுவலகத்திலும் தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
பயணிகள் அனைவரும் விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்றும், அவர்களது உறவினர்கள் அஞ்சத் தேவையில்லை என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கானோர் கதி
இதனிடையே, கேதர்நாத் கோயிலுக்கு சொந்தமான 90 தங்கும் விடுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாகவும், இதில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் நிலை என்ன ஆனது எனத் தெரியாததால், பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

60000 பேரை காணவில்லை
இமாலயா சுனாமியில் சிக்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 60000 பேரைக் காணவில்லை என்று அஞ்சப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சுமார் 60 ஆயிரம் பேர் புனித யாத்திரை சென்றதாகவும், தம்தா என்னும் பகுதியில் மட்டும் 25 ஆயிரம் பேர் தவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 150 பேர்தான் என்று முதலில் கூறப்பட்டாலும் இப்போது பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மீட்புப்பணிகள் தீவிரம்
உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சலில், விமானப்படைக்கு சொந்தமான 20 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத் மற்றும் கோவிந்த் காட் பகுதிகளில் சிக்கித் தவித்த, 15 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள், தற்காலிக முகாம்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications