ராஜ்யசபா தேர்தலில் திமுகவுக்கு ஏன் ஆதரவு தரவில்லை?: இது தான் பாமகவின் தீர்மானம்!

பாமகவின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் கோ.க.மணி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, வேலு, பாமக எம்எல்ஏக்கள் மா.கலையரசு, கணேஷ் குமார் உட்பட 550 செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானது ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிப்பதில்லை, தேர்தலை புறக்கணிப்பது என்பது தான்.
அந்தத் தீர்மானத்தின் முழு விவரம்:
தமிழ்நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, எதிர்காலச் செயல் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக 27.07.2011 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இனி வரும் காலங்களில் திராவிடக் கட்சிகளுடனோ அல்லது தேசியக் கட்சிகளுடனோ கூட்டணி அமைப்பதில்லை என்றும், ஒத்த கருத்துள்ள கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளுடன் இணைந்து தனி அணியை ஏற்படுத்தி போட்டியிடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த முடிவு அனைத்து தரப்பு மக்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கும் பெருமளவில் அதிகரித்து வருகிறது.
இந் நிலையில், தமிழ்நாட்டிலிருந்து ராஜ்யசபாவுக்கு 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்கும்படி போட்டியிடுகின்ற சில கட்சிகள் எங்களுக்கு கோரிக்கை விடுத்தன.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் பேசிய அனைவரும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தனித்துப் போட்டி என்ற முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நிர்வாகக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து இன்றைய செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிர்வாகக்குழு கூட்டத்தில் காணப்பட்ட அதே உணர்வே இன்றைய செயற்குழு கூட்டத்திலும் வெளிப்பட்டது.
மாநிலங்களவைத் தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல், புறக்கணிக்க வேண்டும் என்று செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கருத்தை ஏற்று வரும் மாநிலங்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்றும், ராஜ்யசபா தேர்தலை புறக்கணிப்பது என்றும் செயற்குழு கூட்டம் ஒரு மனதாக முடிவெடுக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மரக்காணம் கலவரத்திற்கு நீதிகேட்டு போராடிய ராமதாஸை ஜெயலலிதா அரசு கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், பாமகவினர் மீது பொய் வழக்குப் போட்டு குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவதாகக் கூறியும், சிறையில் இருக்கும் பாமக எம்எல்ஏ ஜெ.குருவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications