கையில 23 ரூபாய் இருந்தா தைரியமா, நீங்க நகரத்துல ‘குப்பை’ கொட்டலாம்...
டெல்லி: அன்றாட வாழ்க்கையைக் கழிப்பதற்கு நகரங்களில் 23 ரூபாயும், கிராமக்களில் 17 ரூபாயும் மட்டுமே போதுமானதாக இருப்பதாக கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் என்ற அமைப்பு, கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களில் மக்களின் அன்றாட செலவு குறித்து நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வானது, 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான இடைப்பட்ட கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வுக்களம்...
ஆய்வுக்காக 7,496 கிராமங்களும், 5,263 நகரப் பகுதிகளிலும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தினசரி செலவு...
ஆய்வில், கிராமங்களில் வாழ ஏழைகள், ஆளொன்றுக்கு 17 ரூபாய் செலவு செய்வதாகவும், இது நகரங்களில் 23 ரூபாயாக உள்ளது.

அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறை...
அடிமட்டத்தில் உள்ள 5 சதவீத ஏழைகளின் சராசரி மாதந்திர செலவு கிராமங்களில் தலைக்கு ரூ.521.44 ஆகவும், நகரங்களில் தலைக்கு ரூ.700.50 ஆகவும் இருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மெல்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரம்...
மேல்தட்டு மக்களின் முதல் 5 சதவீதம் பேர் சராசரியாக மாதம் நபரொன்றுக்கு, ரூ.4 ஆயிரத்து 481 ஆகவும், நகர்ப்பகுதிகளில் நபரொன்றுக்கு ரூ.10 ஆயிரத்து 282 ஆகவும் இருப்பதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மாதாந்திரச் செலவு...
அகில இந்திய சராசரி கணக்கின்படி, கிராமங்களில் ஒருவரின் மாதாந்திர செலவு ரூ.1, 430 ஆகவும், நகர்ப்பகுதிகளில் ஒருவரின் மாதாந்திர செலவு ரூ.2, 630 ஆகவும் இருப்பதாக அந்த புள்ளி கூறுகிறது. நகர்ப்புற மக்களின் சராசரி மாதாந்திர செலவு, கிராம மக்களின் சராசரி மாதாந்திர செலவை விட 84 சதவீதம் அதிகம் என தெரிய வந்துள்ளதாம்

சாப்பாட்டுச் செலவு...
2011-2012 கால கட்டத்தில், உட்கொள்ளப்பட்ட உணவு அளவில், சராசரி கிராமப்புற இந்தியன், 52.9 சதவீத உணவு உட்கொண்டிருப்பதாகவும் அதில், 10.8 சதவீதம் தானியங்கள் , 8 சதவீதம் பால் மற்றும் பால் பொருட்கள், 7.9 சதவீதம் பானங்கள், சிற்றுண்டி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், 6.6 சதவீத காய்கறிகள் என வகைப்படுத்தப் பட்டுள்ளன.

உணவைத் தாண்டி செலவுகள்...
உணவைத் தாண்டி, எரிபொருள் மற்றும் விளக்குகளுக்கு 8 சதவீதமும், துணி மற்றும் காலணிகளுக்கு 7 சதவீதமும், மருத்துவ செலவாக 6.7 சதவீதமும், கல்விக்கு 3.5 சதவீதமும், இதர நுகர்வோர் சேவைகளுக்கு 4 சதவீதமும் செலவழித்து மக்கள் செலவழிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

சர்ச்சையில் சிக்குமா..?
ஏற்கனவே, அன்றாடம் வாழ்க்கைக்கு ரூ.26 இருந்தால் போதும் என கூறி திட்ட கமிஷன் வெளியிட்ட புள்ளி விவரம் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications