திரும்பிப் போ.. சுதர்சன நாச்சியப்பனுக்கு எதிராக த.பெ.தி.க தொண்டர்கள் கருப்புக் கொடி
பொள்ளாச்சி: கோவை செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனுக்கு பொள்ளாச்சியில் வைத்து தந்தை பெரியார் திராவிட கழக தொண்டர்கள் கருப்புக் கொடி காட்ட முயன்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை செல்வதற்காக காரில் வந்த சுதர்சன நாச்சியப்பனுக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு தந்தை பெரியார் திராவிட கழக தொண்டர்கள் திரண்டனர்.
இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவமுகாமில் பயிற்சி அளிக்க அனுமதியளித்த மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதை அறிந்ததும் காங்கிரசாரும் அங்கு திரண்டனர்.
எதிர்புறத்தில் நின்ற அவர்கள் பெரியார் திராவிடர் கழகத்தினரை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் மூளும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக பொள்ளாச்சி நகரசெயலாளர் நாகராஜ் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications