ப.சிதம்பரம், முக அழகிரி, கபில் சிபலிடம் எவ்வளவு தங்கம் இருக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டு அரசியல் தலைவர்களிடம் எவ்வளவு தங்கம் உள்ளது என்று பார்ப்போம்.

தங்கத்தின் விலை இப்படி விண்ணைத் தொடும் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஒரேயடியாக உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது.

குறைகிறது என்றால் பெரிய அளவில் எல்லாம் இல்லை. இந்நிலையில் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வலிறுத்துவதை கேட்பார் இல்லை.

அப்படிப்பட்ட தங்கம் நம் நாட்டு அரசியல் தலைவர்களிடம் எவ்வளவு உள்ளது என்று பார்ப்போம்.

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

கடந்த ஆண்டு மார்ச் 21ம் தேதி நிலவரப்படி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினியிடம் ரூ. 10.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளது.

சுஷில் குமார் ஷிண்டே

சுஷில் குமார் ஷிண்டே

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்ததுபடி அவரிடம் 955 கிராம் தங்கம் உள்ளது.(கடந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி). அதன் தற்போதைய மதிப்பு ரூ.24.35 லட்சம் ஆகும்.

மாயாவதி

மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தன்னிடம் 1034.26 கிராம் 18 காரட் தங்கம் உள்ளதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்தார். அதன் தற்போதைய மதிப்பு ரூ.20.94 லட்சம்.

ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் 2009ம் ஆண்டு நிலவரப்படி 750 கிராம் தங்கம் உள்ளது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.19.12 லட்சம் ஆகும்.

கபில் சிபல்

கபில் சிபல்

தொலைத்தொடர்புத் துறை மற்றும் சட்ட அமைச்சர் கபில் சிபலிடம் கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 6969.3 கிராம் தங்கம் உள்ளது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.ரூ. 1.77 கோடி ஆகும்.

நிதின் கட்காரி

நிதின் கட்காரி

பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரியிடம் 2008ம் ஆண்டு நிலவரப்படி 1996.5 கிராம் தங்கம் உள்ளது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.50.9 லட்சம் ஆகும்.

முலாயம் சிங் யாதவ்

முலாயம் சிங் யாதவ்

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவிடம் கடந்த 2009ம் ஆண்டு நிலவரப்படி அப்போதைய மதிப்பில் ரூ.77.25 லட்சம் தங்க நகைகள் இருந்தன. அவர் தன்னிடம் உள்ள தங்கத்தின் அளவை தெரிவிக்காமல் மதிப்பை மட்டும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத் பவார்

சரத் பவார்

விவசாயத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் தன்னிடம் 1420.9 கிராம் தங்கம் இருப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்தார். அதன் தற்போதைய மதிப்பு ரூ.36. 23 லட்சம் ஆகும்.

சரத் யாதவ்

சரத் யாதவ்

ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவிடம் 2009ம் ஆண்டு நிலவரப்படி 2050 கிராம் தங்கம் உள்ளது. அதன் தற்போதைய மதிப்பு ரூ. 52.27 லட்சம் ஆகும்.

மு.க. அழகிரி

மு.க. அழகிரி

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியிடம் 2012ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 3727.194 கிராம் தங்கம் உள்ளது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.95 லட்சம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+