என்.எல்.சி. பங்குகளை தமிழக பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்: ஜெயலலிதா

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் ஜூலை 3-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதத்தில், என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது. தனியாருக்கு பங்குகளை விற்பனை செய்யும் அரசின் முடிவை வாபஸ் பெற வேண்டும். என்.எல்.சி. நிறுவனத்தின் பொதுத்துறை தன்மையை பாதுகாக்க வேண்டியது அவசியம். அப்படி பங்குகளை விற்பனை செய்யும் போது அதை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications