கல்யாண வீடு துக்க வீடான சோகம் : புது மாப்பிள்ளையை அடித்துக் கொன்ற தந்தை தலைமறைவு
சீர்காழி: சீர்காழியில், இன்று திருமணம் நடை பெற இருந்த சூழ்நிலையில், நேற்று குடித்து விட்டு வந்த கோபத்தில் மணமகனான மகனை அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் நத்தம் வடக்கு தெருவை சேர்ந்தவரான சங்கரன், சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த இவர் நான்கு மாதங்களுக்கு முன்பு தான் சொந்த ஊர் திரும்பினார். சங்கரனின் மகனான சுரேஷ் குமாரும் அப்பாவுடன் சவுதி அரேபியாவில் தான் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார் சுரேஷ். நேற்று மதியம் நிச்சயதார்த்தமும், இன்று திருமணமும் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நன்கு குடித்து விட்டு வந்துள்ளார் சுரேஷ். இதனை சங்கரன் கண்டித்துள்ளார்.
வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. ஆத்திரத்தில் சங்கரன் அருகில் கிடந்த மண்வெட்டியால் மகனைத் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனை தொடர்ந்து, சுரேஷின் தாயார் பூங்கோதை அளித்த புகாரின் பேரில், வைத்தீஸ்வரன் கோவில் இன்ஸ்பெக்டர் அப்துல் கபூர், சப்-இன்ஸ்பெக்டர் கலைமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், அதற்குள் சங்கரன் தலைமறைவாகிவிட்டார்.
பின்னர், சம்பவ இடத்திலிருந்த சுரேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான சங்கரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications