கர்நாடகா: எதியூரப்பாவுடன் பாஜக தலைவர்கள் இன்று சந்திப்பு- ”இணைப்பு” பற்றி பேச்சுவார்த்தை!

பாரதிய ஜனதா கட்சியைவிட்டு வெளியேறிய எதியூரப்பா கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் கடந்த சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு 10% வாக்குகளைப் பெற்றார். இருப்பினும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் எதிர்வரும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி தயாராகி வருகிறது. இதன் ஒரு கட்டமாக கர்நாடகத்தில் பாஜகவை முன்னைப் போல பலப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன.
இதற்காக கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா தலைமையிலான பாஜக தலைவர்கள் மாநில கட்சித் தலைவர் பிரல்காத் ஜோஷியை இன்று சந்தித்துப் பேசுகின்றனர். சதானந்த் கவுடாவுடன் முன்னாள் சபாநாயகர் போபய்யா, முன்னாள் அமைச்சர்கள் அர்விந்த் லிம்பாவலி, உமேஷ் காட்டி, பசவராஜ் பொம்மை மற்றும் எம்.எல்.சி. மதுசூதனன் ஆகியோர் ஜோஷியை சந்திக்க இருக்கின்ற்னார். இவர்களைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் எதியூரப்பாவை சேர்த்தால்தான் லோக்சபா தேர்தலில் கணிசமான தொகுதிகளை வெல்ல முடியும் என்பது நம்பிக்கை. இதற்காக எதியூரப்பாவையும் இவர்கள் நேரில் சந்தித்துப் பேச இருக்கின்றனர்.
இதனிடையே பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் தனஞ்செய்குமார், பாஜகவில் மீண்டும் இணைய எதியூரப்பா விருப்பமாக இருக்கிறார் என்று கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்?












Click it and Unblock the Notifications