ராஜ்யசபா தேர்தல்.. கருணாநிதி, விஜயகாந்த் அடுத்தடுத்து வாக்களிப்பு!!
சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்ற 6 ராஜ்யசபா எம்.பி.களுக்கான தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் பிற்பகலில் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தேமுதிக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டனர். இதனால் இன்று காலை வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 9 மணிக்கு வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முற்பகல் 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா முதலில் வாக்களிக்க பின்னர் அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். அவர்களுடன் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இணைந்து வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து அதிமுக அணி எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.

பின்னர் பிற்பகல் 1 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்களும் திமுக வேட்பாளரை ஆதரிக்கும் மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணியவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். பிற்பகல் 1.45 மணியளவில் மொத்தமாக 231 எம்.எல்.ஏக்களும் வாக்களித்ததால் வாக்குப் பதிவு நிறைவு அடைந்தது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications