மாஸ்கோ விமான நிலையத்தில் திடீரென மாயமான ஸ்னோடென்... ! யு.எஸ். அதிர்ச்சி!!

விக்கிலீக்ஸ் அசாஞ்சேவைத் தொடர்ந்து அமெரிக்காவை அலற வைத்திருக்கும் பெயர் ஸ்னோடென்...உலக நாடுகளின் அனைத்து இணைய தள தகவல் பரிமாற்றங்கள், சமூக வலைதள தகவல்கள் அனைத்தையும் அமெரிக்கா பிரிசம் என்ற ஆப்பரேஷன் மூலம் கண்காணித்து வருவதை அம்பலப்படுத்தியவர் ஸ்னோடென். இதன் மூலம் உலகை அதிரவைத்த ஸ்னோடென்னை தேடும் நடவடிக்கையில் தீவிரம் காட்டியது அமெரிக்கா.
இந்நிலையில் அவர் சீனாவின் ஹாங்காங்கில் இருந்து மாஸ்கோ வழியாக கியூபாவின் தலைநகர் ஹவானாவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக அவர் மாஸ்கோவில் இறங்கி மாற்று விமானம் மூலம் ஹவானா செல்லத் திட்டமிட்டிருந்தார். திட்டமிட்டபடி அவர் மாஸ்கோ சென்றிருந்தார். ஆனால் அமெரிக்காவோ ஸ்னோடென்னை உடனடியாக கைது செய்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ரஷியாவை வலியுறுத்தியது.
இதை ரஷியா நிராகரித்துவிட்டது. மாஸ்கோ விமான நிலையத்துக்கு மாற்று விமானத்தில் ஏறுவதற்காகத்தான் ஸ்னோடென் வந்திருக்கிறாரே தவிர.. அவர் ரஷியாவில் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.. அவருடன் ரஷிய அதிகாரிகள் எந்த ஒரு தொடர்பும் வைத்திருக்கவில்லை.. அவரை நாடு கடத்துவது என்பதும் ரஷியாவின் மீது குற்றம்சாட்டுவது என்பது நான்சென்ஸ் என்று ரஷிய அதிபர் புதினும் சாடினார்.
இதனிடையே புதிய திருப்பமாக மாஸ்கோவில் இருந்து ஹவானா செல்லும் விமானத்தில் ஸ்னோடென் இன்று செல்லவில்லை. அவர் மாஸ்கோ விமான நிலையத்திலும் இல்லை. அவர் எங்கே போனார் என்ற தகவலும் தெரியவில்லை. அத்துடன் மேலும் 3 நாட்களுக்கு மாஸ்கோவில் இருந்து ஹவானா புறப்படும் எந்த ஒரு விமானத்திலும் ஸ்னோடென் பெயரில் விமான டிக்கெட் பதிவும் செய்யப்படவும் இல்லை. இதனால் மாஸ்கோவில் மாயமான ஸ்னோடென் எங்கே என்பது மர்மமாக இருந்து வருகிறது. இது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications