பெண்களை குறிவைக்கும் இதயநோய்: ஆய்வில் தகவல்
டெல்லி: மாறிவரும் பழக்க வழக்கங்களால் பெண்களை இதய நோய் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளது என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
பெண்களின் உடம்பில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனால் அவர்களுக்கு அவ்வளவு எளிதில் இதய நோய் வராது என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்திய பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அந்த கணக்கெடுப்பில் மாறிவரும் பழக்க வழக்கங்களால் இந்திய பெண்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்பது தெரிய வந்துள்ளது.

ஈஸ்ட்ரோஜன் பற்றாக்குறை
மாறி வரும் பழக்க வழக்கங்களால் பெண்களுக்கு போதிய அளவில் ஈஸ்டோரஜன் சுரப்பதில்லை. இதனால் இளம் பெண்களை இதய நோய் தாக்கும் அபாயம் உள்ளது என்று 65 சதவீத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

5 ஆண்டுகளில் இதய நோயாளிகள் அதிகரிப்பு
கடந்த 5 ஆண்டுகளில் இதய நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை 16 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று 55 சதவீத இதய நோய் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருபதிலும் இதய நோய்
20 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்களுக்கு இதய நோய் ஏற்படுகிறது. இந்த எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் 10 முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்று 41 சதவீத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதய நோய் என்றால்?
இந்திய பெண்களுக்கு இதய நோய்கள் பற்றி தெரிவதில்லை என்று 83 சதவீத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு செல்வதால் தான் பல பெண்கள் இறக்கின்றனர் என்று 76 சதவீத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலைக்குப் போகும் பெண்களை அதிகம் தாக்கும்
வீட்டில் இருக்கும் பெண்களுடன் ஒப்பிடுகையில் வேலைக்குப் போகும் பெண்களை இதய நோய் அதிகம் தாக்குகிறதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications