டாக்டர் சேதுராமனின் மூத்த மகன், மகள், மருமகனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!

மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை எஸ்.ஆர்.டிரஸ்ட் மூலம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனராக டாக்டர் சேதுராமன் இருந்து வருகிறார். இவருக்கு பிரதீபா என்ற மகளும், ரமேஷ், குருசங்கர் ஆகிய மகன்களும் உள்ளனர்.
கடந்த 2005 ம் ஆண்டு முதல் டாக்டர் சேதுராமனின் இளைய மகன் டாக்டர் குருசங்கர் மருத்துவமனையின் துணை தலைவராகவும், எஸ்.ஆர் டிரஸ்டின் தலைமை நிர்வாகியாகவும் உள்ளார். இந்த நிலையில், அவர்களது குடும்ப பிரச்சினை தொடர்பாக டாக்டர் சேதுராமனின் மூத்த மகன் ரமேஷ், மகள் பிரதீபா, மருமகன் மாரியப்பசாய்ராம் ஆகியோர் டாக்டர் சேதுராமனின் கையெழுத்தை தாங்களாகவே போட்டு ஒரு போலி பத்திரத்தை தயார் செய்து பின்பு, அதனை சென்னை தியாகராயநகரில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த டாக்டர் சேதுராமன் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை போலீசார், டாக்டர் சேதுராமனின் கையெழுத்து உண்மைதானா என்பதை கண்டறிய அந்த கையெழுத்தை தடய அறிவியல் துறைக்கு பத்திரத்துடன் அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த கையெழுத்து போலி என தடய அறிவியல் துறை அறிவித்தது.
இதனையடுத்து, மகன் ரமேஷ், மகள் பிரதீபா, மருமகன் மாரியப்ப சாய்ராம் ஆகியோர் மீது சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி போலியாக கையெழுத்திட்ட சேதுராமனின் மூத்த மகன் ரமேஷ், மகள் பிரதீபா மற்றும் மருமகன் மாரியப்ப சாய்ராம் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தின் ஒரு திருப்பமாக, மீனாட்சி மிஷன் மருத்துவமனையை நிர்வகிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதில், டாக்டர் சேதுராமனின் இளையமகன் டாக்டர் குருசங்கர் மருத்துவமனையை நிர்வகிக்க அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடப்பிடதக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications