பரிதி இளம்வழுதி அதிமுகவுக்கு சென்றதால் இழப்பு இல்லை: திமுக
சென்னை: பரிதி இளம்வழுதி அதிமுகவில் இணைந்ததால் திமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை என்று முன்னாள் சென்னை மேயரும், தி.மு.க. இளைஞர் அணி பொது செயலாளருமான மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னையில் பரிதியின் இடத்தை பிடித்தவர் சுப்பிரமணியன். இவரது எழுச்சியாலும் அவருக்கு ஸ்டாலினுடன் ஏற்பட்ட நெருக்கத்தாலும் தான் பரிதி தனது செல்வாக்கை இழந்தார்.
இந் நிலையில் சுப்பிரமணியன் கூறுகையில், பரிதி இளம் வழுதி தி.மு.கவில் இருந்தவரை கட்சி அவருக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவரது தந்தை தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்தார். அவரை தொடர்ந்து பரிதி இளம் வழுதிக்கும் கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.
7 முறை எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. 6 முறை எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றார். தி.மு.க. அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். கட்சியில் துணை பொது செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பராக இருந்தார். தலைவர் கருணாநிதியால் மிகவும் பாராட்டப்பட்டவர்.
2011க்கு பிறகு அவர் தி.மு.கவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இப்போது அவருக்கு போதாத நேரம். அரசியல் புகலிடம் தேடி சென்றுள்ளார்.
அவர் ஒருவர் விலகி சென்றதால் மாபெரும் இயக்கமான தி.மு.கவுக்கு எந்த இழப்பும் இல்லை என்றார்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications