அதெல்லாம் மேலிடம் பார்த்துக்கும்... சொல்கிறார் நாராயணசாமி!

சென்னை வந்த நாராயணசாமி திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணிநேரம் நீடித்த இந்த சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த நாராயணசாமியிடம் என்ன இந்த திடீர் சந்திப்பு என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று வர்ணித்தார் நாராயணசாமி.
பின்னர் மேலும் அவர் கூறுகையில், ராஜ்யசபாதே தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றார். அதற்கு திமுக தலைவர் கலைஞரையும், கனிமொழியையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் என்றார்.
அப்போது செய்தியாளர்கள், ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு அளித்ததை வைத்து அக்கட்சியுடன் கூட்டணி என்று கூற முடியாது என்று கருணாநிதி கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை திமுக கேட்டது. காங்கிரஸ் கட்சியும் ஆதரவு கொடுத்தது. அந்த அளவில்தான் இது இருக்கிறது. கூட்டணி தொடர்பாக எங்கள் கட்சியின் மேலிடம்தான் பதில் கூற முடியும் என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.












Click it and Unblock the Notifications