சாரலுமில்லை தூறலுமில்லை ...குற்றாலத்தில் கியூவில் நின்று குளிக்கும் மக்கள்!
தென்காசி: குற்றாலத்தில் தொடர்ந்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததாலும் மெயினருவியில் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் வேறு எந்த சுற்றுலா தலத்திலும் இல்லாத வகையில் குற்றாலத்தில் தான் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலிய ருவி, நெய்ய ருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி என 9 அருவிகள் அருகருகே அமைந்துள்ளன.
இதில் செண்பகாதேவி, தேனருவிகளில் மட்டும் சமீபகாலமாக குளிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதே போல சிற்றருவியில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிற அருவிகளில் இலவசமாகவே சுற்றுலா பயணிகள் குளிக்கலாம்.

ஆர்ப்பரித்த அருவிகள்
குற்றாலத்தில் கடந்த வாரம் மலைப்பகுதியில் வெளுத்துவாங்கிய கன மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நேற்று முன்தினம் வரை வெள்ளம் ஏற்பட்டு குளிக்க குற்றாலத்தில் பரவலாக வெயில் காணப்பட்ட நிலையில் மதியம் வரை வெயில் தொடர்ந்து தென்பட்டது. தொடர்ந்து மூன்று நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

பேரருவியில் கூட்டம் குறைவுதான்
இதனால் குற்றாலம் பேரருவியில் தண்ணீர்வரத்து சற்று குறைவாக இருந்தது.பேரருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததையடுத்து உள்ளே சென்று குளிக்க முடியாதவாறு அமைக்கப்பட்டிருநத தடுப்பு முழுவதுமாக அகற்றப்பட்டது.

நன்றாக விழுந்த தண்ணீர்
ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும், பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

அலை மோதிய கூட்டம்
அருவிகளில் பரவலாக தண்ணீர் விழுந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் மெயினருவியில் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஐந்தருவி,
புலி அருவி ,பழையக்குற்றால அருவிகளில் சற்று அதிகமாக தண்ணீர் விழுந்ததால் விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதியது.

குடிமகன்களின் ஆட்டம்
இதன் காரணமாக குற்றாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மேலும் பாதுகாப்பு பணியில் போதிய போலீசார் இல்லாததால் குடிமக்களின் ஆட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications