பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு: என்எல்சி தொழிலாளர்கள் நாளை உண்ணாவிரதம்

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது உறுதி என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து என்எல்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். முதல்கட்டமாக கோரிக்கை அட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து வாயிற்கூட்டங்கள் நடத்தினர். இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியதை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
இன்று காலையில் தொழிலாளர்கள் தொழிற்சாலை பகுதிகளிலும், அதைத் தொடர்ந்து அலுவலக பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். உச்சகட்டமாக நாளை காலை 6 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் அனைத்து தொழிற்சங்கங்களின் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
தீவிரமடையும் போரட்டம்
ஜூலை 3ம் தேதி இரவு முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தத்தையும் துவங்குகின்றனர். போராட்டம் தீவிரமடைவதைத் தொடர்ந்து நெய்வேலியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நெய்வேலியில் நேற்று நடந்தது. இதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications